சினிமா

முதல் படத்திலேயே ரஜினியுடன் நடித்த சீரியல் நடிகை…! யார் அவர்?

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக உள்ள இவர் பல வெற்றி திரைப்படங்களில் தமிழ் திரையுலகிற்கு கொடுத்துள்ளார். Super Star Rajinikanth உடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பல நடிகர்கள் ஆசைப்படுவது உண்டு. ஆனால் சீரியல் நடிகை ஒருவர் தன் முதல் படத்திலேயே இவருடன் நடித்துள்ளார். அவர் யார், இப்போது எப்படி உள்ளார் என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.

ரஜினிகாந்த் அவர்கள் 1975-ம் ஆண்டு வெளிவந்ந அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். K. Balachander இப்படத்தினை இயக்கினார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

2007-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்கு 26 கோடி சம்பளம் பெற்றார். இதன் மூலம் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரையும் இவர் பெற்றார். தன் நடிப்பு திறமையால் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் நடித்து 1999-ம் ஆண்டு வெளிவந்ந படையப்பா திரைப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. இப்படத்தில் பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருப்பர். ஆனால் இப்படத்தில் வில்லியாக Ramya Krishnan, நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்தது இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. K. S. Ravikumar இப்படத்தினை இயக்கி இருப்பார். இதன் பிறகு தான் கே. எஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

இப்படத்திற்கு பிறகு 2014-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வந்த லிங்கா படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இப்படத்திற்கு பிறகு இவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை.

இந்த நிலையில் படையப்பா திரைப்படத்தில் என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா என்ற பாடலில் குழந்தை நட்சத்திரம் ஒன்று இடம் பெற்று இருக்கும். அந்த குழந்தை தான் இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியாக நடித்துள்ள ஹேமா பிந்து என்று தகவல் வெளியாகியுள்ளது.

அப்பாடலில் மீசை வச்ச குழந்தை அப்பா என்னும் பாடல் வரி வரும்பொழுது ஒரு குழந்தையின் முகம் வரும், அதன் பிறகுதான் ரஜினிகாந்தின் முகம் வரும். அந்த சின்ன குழந்தை தான் தற்போது பிரபல சீரியல் நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது இவர் Sun TV-ல் ஒளிபரப்பாகும் இலக்கியா சீரியலில் நடித்து வருகிறார்.

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago