Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவை இனிப்பு தான். இன்று நாம் செய்ய உள்ள உணவும் இனிப்பு சுவை கொண்ட ஒன்றுதான்.
நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் இருதியில் நாம் ருசிக்க விரும்புவது இனிப்புகள் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இனிப்புகள் தான். இந்த பதிவில் தேங்காய் மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் தேங்காய் லட்டு செய்வது எப்படி (Thengai Laddu Seivathu Eppadi) என்பதை பார்க்கலாம்.
தேங்காய் லட்டு (Coconut Ladoo) Thengai Laddu Recipe in Tamil
பொதுவாக நம் வீடுகளில் ஏதாவது சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றது பெரும்பாலும் ஆகும் இனிப்பு பழகாரம் லட்டு ஆகும். இந்த லட்டில் பல வகைகள் உள்ளன. ரவா லட்டு, பூந்தி லட்டு, வேர்க்கடலை லட்டு, தேங்காய் லட்டு மற்றும் கோதுமை லட்டு இது போன்ற பல வகைகள் உள்ளன.
லட்டு என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருப்பதி தான். ஏனென்றால் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை கோவிலில் பிரசாதமாக லட்டு தான் வழங்கப்படுகிறது. இந்த பதிவில் நாம் தேங்காய் லட்டு செய்வது எப்படி (How to Make Coconut Ladoo)என்பதை பார்க்க உள்ளோம். இந்த தேங்காய் லட்டு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் (Thengai Laddu Ingredients)
- தேங்காய் துருவல் – 1 1/2கப்
- சர்க்கரை – 1/2 கப்
- காய்ச்சிய பால் – 1கப்
- டெசிகேடட் கோக்கனட் – தேவையானஅளவு
- நெய் – தேவையானஅளவு
தேங்காய் லட்டு செய்முறை (Thengai Laddu Seivathu Eppadi)
- தேங்காய் லட்டு செய்ய (Coconut Ladoo Recipe in Tamil) முதலில் ஒரு தேங்காயை துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் நெய் ஊற்ற வேண்டும். நெய் சூடான பிறகு அதில் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
- பிறகு தேங்காய் உடன் பால் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் சிறிது வற்றும் வரை இடை இடையே கலந்து விட வேண்டும்.
- பால் சிறிதளவு வற்றிய பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும் (ஈரப்பதம் இல்லாத அளவிற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்).
- சுத்தமாக ட்ரை ஆன பிறகு லேசாக சூடு தணிந்த பின்னர் கையில் எடுத்து உருண்டையாக உருட்டி லட்டு போல் பிடித்து வைக்க வேண்டும்.
- இறுதியாக லேசாக டெசிகேடட் கோக்கனட்டில் பிரட்டி எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் இதே போல் அனைத்தும் உருட்டி வைத்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.
Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…
வீட்டிலேயே தேங்காய் லட்டு செய்வது எப்படி என்பதை (Thengai Laddu Recipe in Tamil) இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
Type: Dessert
Keywords: Thengai Laddu Recipe in Tamil, Coconut Ladoo
Recipe Yield: 5
Preparation Time: PT5M
Cooking Time: PT25M
Total Time: PT30M
Recipe Ingredients:
- Grated Coconut – 1 1/2 cups
- Sugar – 1/2 cup
- Boiled milk – 1 cup
- Desiccated coconut – as required
- Ghee – required quantity
4.5
மேலும் படிக்க: Instant Ragi Recipes: மாவு இல்லாத நேரத்துல இத செஞ்சு பாருங்க..! அடிக்கடி செய்வீங்க..! |