Homeசமையல் குறிப்புகள்Thengai Paal Rasam Recipe: குழந்தைகளையும் சாப்பிட வைக்கும் தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி…

Thengai Paal Rasam Recipe: குழந்தைகளையும் சாப்பிட வைக்கும் தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி…

உணவே மருந்து என்ற முறையை பின்பற்றி தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். சுவை உள்ள உணவாக இருந்தாலும் அதில் மருத்துவ குனமும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் தான் நம் முன்னோர்கள் உணவுகளை உண்டு வந்தனர். அந்த வகையில் நாம் இன்று சமைக்க உள்ள உணவு தேங்காய் பால் ரசம் (Thengai Paal Rasam Recipe).

தென்னிந்திய உணவு வகைகளில் பல சத்துக்கள் உள்ளது. இன்றளவும் நம் வீடுகளில் காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு ரசம் வைத்து உண்பார்கள். ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் போன்றவை இருப்பதால் உண்பவர்களின் செரிமான திறனை அதிகரிக்கும். எனவே இது ஒரு சத்துள்ள உணவு வகை ஆகும்.

ரசம் சாப்பிடுவதால் ஜீரண ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் குடல ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. அதிலும் இந்த ரசத்தில் தேங்காய்பால் சேர்த்து செய்தால் ஜீரண ஆற்றலை அதிகரிப்பதோடு வாய்ப்புண், வயிற்றுப் புண்ணையும் சரிசெய்யும். இந்த சத்துள்ள தேங்காய்பால் ரசம் செய்வது எப்படி (How To Make Thengai Paal Rasam) என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

தேங்காய் பால் ரசம் (Thengai Paal Rasam in Tamil)

உணவு உண்பதற்கு முன்னரோ, உணவுடனோ அல்லது உணவு பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். இந்த ரசம் செரிமான செரிமான திறனை அதிகரிப்பதால் நாம் தினமும் உணவு உண்ட பிறகு ரசம் உண்பது நல்லது என கூறப்படுகிறது. சிலர் சாதத்தில் ரசம் போட்டு சாப்பிடுவார்கள், ஒரு சிலர் ரசத்தை மட்டும் குடிப்பார்கள். இந்த ரசத்தில் மிளகு, சீரகம், பூண்டு போன்றவை இருப்பதால் இது ஒரு சத்துள்ள உணவு ஆகும். இந்த ரசத்தில் தேங்காய் பால் கலந்தால் இது தேங்காய் பால் ரசமாகும். இந்த ரசம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை போன்றவற்றை கீழே காண்போம்.

தேவையானவை (Thengai Paal Rasam Recipe Ingredients) Coconut Milk Rasam Recipe

  • தக்காளி – 1
  • தேங்காய் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • பூண்டு – 3 பல்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்துமல்லி – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை (Thengai Paal Rasam Seivathu Eppadi)

  • இந்த தேங்காய் பால் ரசம் (Coconut Milk Juice Recipe) செய்ய முதலில் ஒரு தேங்காயை துருவி அறைத்து இரண்டு முறை பால் எடுத்துக் கொள்ள வேண்டும். (முதல் பால் மற்றும் இரண்டாம் பாலை தனித்தனியாக எடுத்துக்கொள்ளவும்)
  • அதன் பிறகு ரசத்திற்கு தேவையான பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
Thengai Paal Rasam in Tamil
  • தனியாக எடுத்து வைத்துள்ள 2வது பாலில் தக்காளியைப் போட்டு ஒரு கொதி வந்தத பிறகு அதில் அரைத்த மிளகாயை சேர்க்க வேண்டும்.
  • கொத்துமல்லி, கறிவேப்பிலை இலைகளை போடவும். இறுதியாக கெட்டியான முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி தேங்காய் எண்ணெயை ஊற்றவும். இப்போது சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.
Thengai Paal Rasam Recipe: குழந்தைகளையும் சாப்பிட வைக்கும் தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி…

சத்துள்ள தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி (Thengai Paal Rasam Recipe) என்பதை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.

Type: Dish

Cuisine: Tamil Nadu

Keywords: Coconut Milk Rasam, Thengai Paal Rasam Recipe

Recipe Yield: 5

Preparation Time: PT0M

Cooking Time: PT20M

Total Time: PT30M

Recipe Ingredients:

  • Tomato – 1
  • Coconut – 1
  • Green Chillies – 2
  • Cumin – 1/2 tsp
  • Garlic – 3 cloves
  • Salt as needed
  • Coriander – a little
  • Curry leaves – a little
  • Coconut Oil – as required

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: Kadamba Sambar Recipe: காய்கறிகள் நிறைந்த கதம்ப சாம்பார்… ஈசியான செய்முறை விளக்கம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular