Homeசெய்திகள்தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு பகுதிகளில் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால், கெலவரப்பள்ளி அணை மற்றும் கே.ஆர்.பி (KRP) அணை ஆகியவை நிரம்பியுள்ளன. இதில் கேஆர்பி அணையின் நீர்மட்டம் தற்போது அதன் அதிகபட்ச உயரமான 52 அடியில் 51 அடி என பதிவாகியுள்ளது.

மேலும், அணையில் நீர்வரத்து வினாடிக்கு 2400 கன அடியிலிருந்து 3208 கன அடி வரை அதிகரித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, வினாடிக்கு 4000 கன அடி நீர் தற்போது தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அணையின் தரைபாலம் முழுமையாக மூழ்கியுள்ளது. மேலும், தொடர்ந்து கனமழை நீடித்தால், அணையில் இருந்து மேலும் கூடுதல் நீர் வெளியேற்றப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார், பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்:

தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்

ஆற்றின் கரையோரத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணை வரை, ஆற்றங்கரையோரத்தில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

மழை தொடரும் சூழ்நிலையில், மக்கள் அலட்சியம் காட்டாமல் அரசு உத்தரவை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகிறோம்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில், 2022-ஆம் ஆண்டு ஜூலையில் 4.8% மற்றும் 2023-ஆம் ஆண்டு ஜூலையில் 2.18% என்ற அளவில் மின்கட்டண உயர்வுகள் நடைமுறைக்கு வந்திருந்தன. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் மின்கட்டண உயர்வு செய்யபடலாம் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. மேலும், 3% உயர்வுக்கான பரிந்துரை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த சூழலில், அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக மின் கட்டண உயர்வைச் சார்ந்த அதிகாரபூர்வமற்ற செய்திகள் சமூகத்தில் பரவி வருகின்றன. தற்போது, மின்கட்டண உயர்விற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை,” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, வீட்டு நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லாமல் இருக்க வேண்டும், அதேசமயம் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கடைப்பிடிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: சேலத்தில் அதிமுகவுக்கு புதிய பலம் – தவெக, பாமக, திமுக ஆதரவாளர்கள் திரளாக இணைந்த அதிர்ச்சி நகர்வு!
RELATED ARTICLES

Most Popular