இந்திய அளவில் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஒன்று தான் இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். இப்போட்டிகள் வருடாவருடம் நடைபெறுகிறது. இந்த 2024-ம் ஆண்டின் ஆரம்பம் முதலே இந்த ஐபிஎல் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது இந்த போட்டிகள் குறித்த முக்கிய (IPL 2024 Starting Date) தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடம் 17-வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் வரும் மார்ச் மாதம் 22-முதல் தொடங்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தல்களுக்கு மத்தியில் இப்போட்டிகள் இந்தியாவில் முழுமையாக விளையாடப்படும் என்று ஐ.பி.எல் நிர்வாக தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.
இந்த தகவல் தொடர்பாக நிர்வாக தலைவர் அருண் துமால் கூறியதாவது, இந்த சீசன் ஐ.பி.எல் தொடரை வரும் மார்ச் 22-ம் தேதியில் (IPL First Match Date 2024) தொடங்கலாம் என்று நினைக்கிறோம். இந்த தொடரின் முதல் 10 நாட்களின் ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு மீதமுள்ள போட்டிகளுக்கான பட்டியல் பின்னர் அறிவிக்கப்படுத் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் தேர்தல் நடைபெறும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஐபிஎல் போட்டிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் போட்டிகள் நடைபெறுவது குறித்த பேசிய அவர், மக்களவைத் தேர்தல் நடைபெறும் போது ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல என்றும் இதற்கு முன்னர் கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எல் இரண்டாவது சீசன் தேர்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. மேலும் 2014-ம் ஆண்டு முதல் 20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் மற்றவை இந்தியாவிலும் விளையாடப்பட்டது என்று அவர் கூறினார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்க உள்ளது. எனவே மே மாத இறுதியில் ஐ.பி.எல் போட்டிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து சீசன்களிலும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள் தான் அடுத்த சீசனின் முதல் போட்டியை (IPL 2024 First Match) விளையாடும். இதேபோல இந்த சீசனிலும் முதல் போட்டியை கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: சிஎஸ்கேவில் தோனியின் சம்பளம் இத்தனை கோடியா? |