செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கோடை விடுமுறை எத்தனை மாதம் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வழக்கமான தேர்வுகள் முடியும் போது விடுமுறை விடப்படும். ஒரு கல்வி ஆண்டு மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடுவது வழக்கம். முதல் இரண்டு பருவங்களுக்கு 1 வாரம் முதல் 10 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால் மூன்றாம் பருவத்திற்கு அப்படி இல்லை. மூன்றாம் பருவ தேர்வுகளுடன் அந்த கல்வி ஆண்டு முடிவடையும் காரணத்தால் பொது தேர்வுகள் முடிவடைந்த பிறகு மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு விடுமுறையாக (Summer Holiday In Tamilnadu) தான் இருக்கும்.

அதேபோல தான் இந்த வருடமும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரையில் வழக்கமாக பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நிறைவுற்று கோடைகால விடுமுறையாக மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். அனால் இந்த வருடம் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவுள்ளது. முதற்கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதி வரை தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. வருடம் தோறும் வழக்கமாக ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது தான் வழக்கம். ஆனால் இந்த வருடம் தேர்தல் மற்றும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 வரை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வருடம் தேர்தல் காரணமாக தேர்வுகளும் விரைவில் நடத்தப்பட்டது. பெரும்பாலான மாணவர்களுக்கு கடந்த 8-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் இரண்டு மாதம் கோடை விடுமுறை (This Year Summer Holiday) கிடைத்துள்ளதாக கூறி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: Kuthiraivali Pongal Recipe: இத ஒரு டைம் செஞ்சு பாருங்க..! அப்புறம் இட்லி தோசை எல்லாம் மறந்துடுவீங்க..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago