Thummal Sagunam: தும்மல் நல்ல சகுனமா.. இல்லை கெட்ட சகுனமா..! பொதுவாக யாராவது பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது கடவுளுக்கு ஏதாவது பூஜைகள் செய்துக்கொண்டிருக்கும் போதோ யாரேனும் தும்மினால் அதனை ஒரு சிலர் கெட்ட சகுனமாக சொல்வார்கள். அதுவே குழந்தைகள் தும்மினால் (kuzhanthai thumbinal nallatha kettatha) நூறு வயது என்று கூறுவார்கள். அதிலும் பேசும் காரியங்கள் நல்ல செய்தியாகவோ அல்லது கெட்ட செய்தியாகவோ இருந்தால், பெண் மற்றும் ஆண் தும்மலுக்கு ஏற்றது போல பலன்களை சொல்வார்கள்.
அதுபோல சில சமயங்களில் பயணம் செய்ய தயாராக இருந்தால் அந்த சமயத்தில் யாராவது தும்மினால் அது மிகவும் அபசகுணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் (Thummal nallatha kettatha) அவர்களை சற்று அமர்ந்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு பிறகு தான் போக சொல்வார்கள்.
நமது ஜோதிட சாஸ்திரத்தில் நம் முன்னோர்கள் பலவகையான சாஸ்திரங்களை (Thummal Sasthiram in tamil) வகுத்து வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நமது ஜாேதிட சாஸ்திரம் அறிவியலை மையமாக கொண்டு தான் எழுதப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த சாஸ்திரங்களை வைத்து தான் இன்றும் நாம் பல வகையான நிகழ்விற்கு அடிப்படைகளை வகுத்து வருகின்றோம். அதனால் நம் முன்னோர்கள் வகுத்து வகுத்துள்ள இந்த சாஸ்திர, சகுனங்களை ஆன்மீகம் ரீதியாக மட்டும் பார்க்காமல் அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும்.
இதனை மூடநம்பிக்கைகள் என்று எண்ணிவிடக் கூடாது. காரணம் அறிவியலை மையப்படுத்தி வகுக்கப்பட்ட இது போன்ற சாஸ்திரங்கள் தான் இன்றளவும் அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்தால் பறவைகளை வைத்து பஞ்ச பட்சி சாஸ்திரம், விலங்குகள், ஊர்வன என அனைத்து வகையான உயிரினங்களையும் மையப்படுத்தி சகுனங்களை வகுத்து வைத்துள்ளோம்.
பறவைகளில் பஞ்ச பட்சி என்பது ஒரு முக்கியமான சாஸ்திரமாகவும், ஏனென்றால் பறவைகளுக்கு எதிர்காலத்தில் நிகழவிருக்கும் நிகழ்வுகள் முன்னதாகவே தெரியும் என்பதால், நம் முன்னோர்கள் காக்கை கரையும் பலன்கள் போன்றவற்றை வகுத்து வைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்லி சொல்லும் பலன்கள், பல்லி விழும் பலன்கள், மச்ச பலன்கள், கனவு பலன்கள் போன்ற பலன்கள் நம் முன்னோர்களால் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாம் இன்று இந்த பதிவில் பார்க்க இருப்பது தும்மல் பலன். இது ஆண், பெண் மற்றும் எப்போது தும்மினால் என்ன பலன் போன்றவற்றை வகுத்து வைத்துள்ளளனர். அதனை பற்றி (Thummal Palangal in tamil) நாம் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
தும்மல் பற்றி திருவள்ளுவர் கருத்து
நினைப்பது போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
என்று திருவள்ளுவர் திருக்குறள் ஒன்றில் தும்மல் பற்றி கூறியிருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால் தலைவிக்கு தும்மல் வருவது போல தோன்றுகிறது. அனால் தும்மல் வராமல் அப்படியே நின்றுவிடுகிறது. இதற்கு தலைவி தலைவன் தன்னை பற்றி முதலில் நினைத்துவிட்டு பிறகு நினைக்காமல் போய்விட்டார். அதனால் தான் தும்மல் வந்தது பிறகு நின்று விட்டது என்று தலைவனை தலைவி சந்தேகித்து கொள்கிறாள்.
இது போன்றே பழங்காலந்தொட்டே தும்மல் சாஸ்திரம் பற்றி நூல்களிலும் இடம் பெற்றிருக்கிறது. இன்றளவும் இந்த தும்மல் சகுனம் பார்ப்பது நமது வழக்கத்தில் இருப்பது பெரும் வியப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் மற்றும் பெண் தும்மினால் என்ன பலன்
ஒரு ஆண் ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அல்லது நினைத்து கொண்டிருக்கும் போதோ பெண் தும்மினால் அது நல்ல சகுணமாக (Sneeze Benefits in Tamil) பார்க்கப்படுகிறது. அதுபோல ஒரு பெண் ஒரு விஷயத்தை பற்றி பேசும் போது அல்லது நினைத்து கொண்டிருக்கும் போதோ ஆண் தும்மினால் அது நல்ல சகுணமாக பார்க்கப்படுகிறது.
மாறாக ஒரு ஆண் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து கொண்டிருக்கும் போது ஒரு ஆண் தும்மினால் அது கெட்ட சகுனம் ஆகும். ஒரு பெண் ஒரு விஷயத்தை நினைத்துக்கொண்டிருக்கும் போது பெண் தும்மினால் அது கெட்ட சகுனமாகும்.
இரட்டை தும்மல்
தும்மல் சாஸ்திரங்களின் படி தும்மலில் ஒற்றை தும்மலில் எந்த பலனும் கிடையாது. ஆனால் ஒருவர் ஒரு விஷயத்தை நினைத்துக்கொண்டிருக்கும் போது ஒருவர் இரண்டு முறை தொடர்ச்சியாக தும்மினால் அவர்கள் நினைத்த காரியம் படிப்படியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதேசமயம் தொடர்ச்சியாக ஒருவர் தும்மினால் அந்த தும்மலுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என்பதே உண்மை.
சளி, கபம் பிடித்து ஒருவர் தும்மினால் அதற்கு எந்தவொரு பலனும் இல்லை என்று அர்த்தம்.
விலங்கள் தும்மல் மற்றும் பலன்கள்
மனிதர்களுக்கு மட்டும் தான் தும்மல் வரும் என்பது இல்லை. விலங்குகளுக்கும் (Vilangu Thummal Palangal in Tamil) தும்மல் வரும். அப்படி அவைகள் தும்மினால் என்ன பலன் என்று பார்ப்போம். ஏதேனும் ஒரு சுபகாரியத்திற்காக நீங்கள் செல்கிறீர்கள் என்றால் அந்த காரியம் நல்லபடியாக விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
பொதவாக ஒரு காரியத்திற்கு செல்லும் போது வழியில் யாணையை பார்த்தால் அது நல்ல சகுனம். அதே சமயம் ஒரு யானையின் தும்மல் கேட்டால் அது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. இது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் நல்லதாக பார்க்கப்படுகிறது.
ஒரு நாய் தும்மலை கேட்டால் அது மிகவும் நல்ல சகுனமாகும். நீங்கள் ஒரு சுபகாரியத்திற்கு செல்லும் போது நாயின் தும்மலை கேட்டால் அது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.
திசைகளும் தும்மல் பலனும்
தெற்கு திசையில் நீங்கள் நிற்கும் போது அல்லது தெற்கு திசை நோக்கி நீங்கள் செல்லும்போது உங்களுக்கு தும்மல் வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது.
மேற்கு திசை நோக்கி நீங்கள் தும்மினால் அது நல்ல சகுனமாக கருதப்படுவதில்லை. வாஸ்து சாஸ்திர படி மேற்கு திசையில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் அதனால் இந்த திசையில் தும்மினால் அது கெட்ட சகுனமாகும்.
வடக்கிழக்கு திசையை நோக்கி நீங்கள் தும்மினால் நல்ல சகுனமாகும். அதுவே வடக்கிழக்கு திசையில் அமைந்துள்ள கோயிலில் அமர்ந்து நீங்கள் தும்மினால் அது மிகவும கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.
வடக்கு திசையை பார்த்து தும்மினால், அல்லது வேறு ஒருவரின் தும்மல் சத்தத்தை நீங்கள் கேட்டால் அது மிகவும் அபசகுணமான ஒன்று. எதாவது பிரச்சனைகளில் நீங்கள் ஈடுபடலாம் எனவே கவனமாக இருப்பது நல்லது.
தும்மல் எப்போது கெட்ட சகுனம்
ஒருவர் வீட்டை விட்டு வெளியே வரும் போது யாராவது தும்மினால் அது நல்லதல்ல.
பால் காய்ச்சும் போது ஒருவர் தும்மினால் அது அசுபமானது.
திருமணம் போன்ற நல்ல காரியங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் என்பதற்க்காக தான் கெட்டி மேளம் பலமாகத் தட்டியும், நாதஸ்வரத்தை ஊதி பலமாக ஓசையெழுப்பியும், தும்மல் சத்தத்தை அடக்கிவிடுகின்றார்கள்.
தும்மல் பற்றிய – FAQS
1. தும்மல் பிரச்சனையை நான் எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உங்கள் நாக்கால் உங்கள் வாயின் மேல்பகுதியை கூசுவதன் மூலம் நீங்கள் தும்மலை நிறுத்தலாம். சுமார் 5 முதல் 10 வினாடிகளுக்குப் பிறகு, தும்முவதற்கான ஆசை மறைந்துவிடும்.
2. எத்தனை முறை தும்மல் வருவது இயல்பானது?
ஒரு நாளைக்கு 4 முறைக்கு குறைவாக தும்மல் வந்தால் இயல்பானது.