Homeசினிமாதுணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரம் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரம் மாரடைப்பால் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் துணிவு.இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களில் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தனர் என்று தான் கூறவேண்டும். அந்த வரிசையில் ஒருவர் தான் பாலிவுட் நடிகரான ரிதுராஜ் சிங்.

இவர் துணிவு படத்தில் தன்னுடைய நடிப்பினால் மக்களை கவர்ந்தார். மேலும் இவர் அப்னி பாத், ஜோதி, ஹிட்லர் திதி, ஷாபட், வாரியர் ஹை, அஹத், அதாலத், தியா அவுர் பாத்தி போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழில் தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைபடமான துணிவு படத்தில் நடித்து இருந்தார்.

இந்த துணிவு படத்தில் இவர் பிரபல நிதி நிறுவனத்தில் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தார். மேலும் 1989-ம் ஆண்டு வெளியான இன் அன்னி கிவ்ஸ் இட் தோஸ் ஒன்ஸ் என்னும் படத்தில் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பிரபல ஹிந்தி சீரியல் நடிகரான இவர் பிப்ரவரி 20-ம் தேதி அதிகாலையில் மாரடைப்பு காரணமாக (Hindi Serial Actor Rituraj Death News) உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 59 ஆகும். மேலும் இவருடைய இறப்பை அவருடைய நண்பருமான அமித் பெஹ்ல் உறுதிப்படுத்தியுள்ளார்.

Thunivu Movie Actor Rituraj

மேலும் (Hindi Serial Actor Rituraj Died) இது குறித்து கூறிய அவர், இன்றிரவு 12:30 மணியளவில் ரிதுராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் இவரது மறைவுக்கு ஹிந்தி சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இந்த திடீர் மறைவு ஹிந்தி சீரியல் நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மலையாள நடிகர்..! யார் தெரியுமா?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular