Homeஆன்மிகம்திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்.. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்.. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளியூர் பக்தர்கள், வெளி மாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் என்று நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால் திருப்பதியில் எப்பொழுதும் திருவிழா போன்று தான் காட்சியளிக்கும். அதிலும் பண்டிகை நாட்கள், வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். திருப்பதியில் அதிகமான பக்தர்கள் வரும் நாட்களில் அவர்கள் தரிசனத்திற்காக (Tirupati Temple Tharisanam) பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றன.

இந்நிலையில் இந்த கல்வியாண்டிற்கான பொது தேர்வுகள் மாணவர்களுக்கு வைக்கப்பட்டு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இதனால் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் ஆகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 86,241 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31, 730 பக்தர்கள் வரை தலைமுடி காணிக்கை செலுத்தினார்கள். நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகம் என்பதால் நேற்று மட்டும் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று மாலை எண்ணப்பட்டது. இதில் ரூ.3.65 கோடி மட்டும் உண்டியல் (Tirupati Undiyal Collection) காணிக்கையாக கிடைத்தது.

இந்நிலையில் திட்கட்கிழமையான இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் நீண்ட காலமாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இவர்கள் கிட்டதட்ட 8 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதில் சுமார் ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Tirupati Undiyal Collection
மேலும் படிக்க: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று இதை செய்தாலே போதும்..! வீட்டில் செல்வம் பெருகும்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular