Homeஆன்மிகம்Tiruvannamalai Girivalam: மகத்துவம் நிறைந்த திருவண்ணாமலை கிரிவலம்..!

Tiruvannamalai Girivalam: மகத்துவம் நிறைந்த திருவண்ணாமலை கிரிவலம்..!

Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவபெருமானாக பாவித்து அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மாலையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவல பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் (Tiruvannamalai Girivalam Path). 

இந்த பாதைகள் முட்கள் நிறைந்ததாக இருக்கும். கிரிவலம் செல்வதற்கு அனைத்து மாதங்களும் சிறந்த மாதமாக இருந்தாலும். பெளர்ணமி அன்று செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம். பக்தர்கள் கிரிவல பாதையை நடந்து தான் மேற்கொள்ள வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். திருவண்ணாமலை கிரிவலத்தின் மகிமையை உணர்ந்தவர்கள், இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கிரிவலம் மேற்கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

திருவண்ணாமலை கிரிவலம் தூரம்

திருவண்ணாமலை கிரிவலம் தூரம் (Thiruvannamalai Girivalam Distance) அதாவது அருணாச்சலேஸ்வரர் கிரிவல மலையின் சுற்றளவு 14 கி.மீ ஆகும்.

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறைTiruvannamalai Girivalam

முதன் முதலாக கிரிவலம் செல்பவர்கள் (Girivalam sellum muraigal) திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள காவல் தெய்வமான பூத நாராயணரைத் தரிசனம் செய்ய வேண்டும். அவரின் அனுமதிப் பெற்ற பின்பு, வழியில் உள்ள இரட்டை பிள்ளையாரை வணங்க வேண்டும். பிறகு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கிவிட்டு, உண்ணாமலை அம்பிகையை வழிபட்டு விட்டு பிறகு கோயிலின் கோபுரத்தை வணங்கி விட்டு கிரிவலத்தை தொடங்க வேண்டும்.

கிரிவலம் செல்லும் போது பக்தர்கள் பக்தி பாடல்களை கேட்டுக்கொண்டு பயணத்தை மேற்கொள்ளலாம். பாடல்கள் பாடி கொண்டே செல்லலாம் அல்லது “சிவாய நம”, “ஓம் நம சிவாய” என்ற நாமத்தை கூறி கொண்டே செல்லலாம்.

கிரிவலம் செல்லும் போது ஒரு நிறைமாத கர்பிணி எவ்வாறு தான் எடுத்து வைக்கும ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து தன் குழந்தையை நினைத்து அடி எடுத்து வைக்கிறாளோ அதுபோல தான் நாம் கிரிவலம் செல்லும் போது நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அந்த சிவபெருமானை நினைத்துக்கொண்டு எடுத்து வைக்க வேண்டும்.

கிரிவலம் செல்லும் போது வழியில் ஆசிரமங்கள் உள்ளன. பக்தர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப முன்பதிவு செய்து கொண்டு தங்கலாம். கிரிவலம் மேற்கொள்ளும் போது வழியில் பறவைகள், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவளித்தால் புண்ணியம் கிடைக்கும்.

அஷ்ட லிங்க கோயில்களின் தரிசனம்Thiruvannamalai Girivalam Asta Lingam

திருவண்ணாமலை Arulmigu Arunachaleswarar Temple (tiruvannamalai official website) தொடக்கத்தில் இருந்து கிரிவல மலையை சுற்றி பல சன்னிதிகள் இருந்தாலும், முக்கியமாக கருதப்படுவது இந்த அஷ்ட லிங்க கோயில்களின் தரிசனம் தான். இந்த லிங்கங்கள் மொத்தம் 8 உள்ளன ஒவ்வொன்று சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்திர லிங்கம்

அஷ்ட லிங்கத்தில் முதல் லிங்கமாக இருப்பது இந்த இந்திர லிங்கம் தான். இந்த லிங்கம் தான் இந்திரன் வழிபட்ட லிங்கமாகும். இந்த லிங்கம் கிழக்க முகமாக அமைந்திருக்கும். கிழக்கின் அதிபதி சூரியனாகும். இங்கு இந்திரன் வஜ்ராயுதத்தை தாங்கியவராக அருள்புரிகிறார். இந்த லிங்கத்தை வழிபட்டால் லட்சுமி கடாசமும் பெரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

அக்னி லிங்கம்

கிரிவல பாதையில் செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென்கிழக்கிற்கு அதிபதி சந்திரன். இந்த லிங்கத்தை அக்னி லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய், மனகவலை நீங்கும்.

எம லிங்கம்

எமராஜன் அங்கபிரதட்சணம் சென்று சிவனை வழிபட்டார் என்ற ஒரு ஐதீகம் உள்ளது. ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த கோயிலின் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தால் பண கஷ்டம் நீங்கி, பொருளாதாரம் பெருகும்.

நிருதி லிங்கம்

நான்காவது லிங்கமாக உள்ளது இந்த நிருதி லிங்கம். இந்த லிங்கத்தின் முன்பு ஒரு நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் முன் நின்று மலையை பார்த்தால் மலையில் உள்ள நந்தி தெரியும். ராகு இந்த திசைக்கு அதிபதியாக இருக்கிறார். இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனக்கவலை நீங்கும்.

வருண லிங்கம்

ஐந்தாவது லிங்கமாக இருப்பது வருண லிங்கம். இது ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. நீருக்கு அதிபதியான வருண பகவான் இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டார். அவர் வழிபட்டு கண் திறந்த போது அங்கு சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது. அது தான் இந்த வருண லிங்கம். மேற்கு திசையில் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி பகவான் ஆகும். இங்கு வந்து வழிபட்டால் தீராத நோய் தீரும்.

வாயு லிங்கம்

ஆறாவது லிங்கமாக இருப்பது வாயு லிங்கமாகும். இந்த லிங்கத்தின் திசை அதிபதி கேது ஆவார். இந்த சன்னிதியை அடையும் போது இயற்கைகயாகவே ஒரு நிம்மதி கிடைக்கும். தென்றால் காற்று வீசும். இந்த லிங்கத்தை வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

குபேர லிங்கம்

ஏழாவது லிங்கமாக இருப்பது குபேர லிங்கம். இந்த திசையின் அதிபதியாக இருப்பவர் குரு. செல்வங்களின் அதிபதியான குபேரர் ஆண்டியான சிவபெருமானை வந்து இங்கு வணங்கினார் என்பது ஐதீகம். அவர் தரிசித்த இடத்தில் சுயம்பு லிங்கம் தோன்றியது. அதுதான் இந்த குபேர லிங்கமாகும். இங்கு வந்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஈஷான்ய லிங்கம்

கிரிவல பாதையில் கடைசி லிங்கமாக காட்சி தருவது ஈஷான்ய லிங்கம். இங்கு சிவபெருமான ஈசனே இருப்பதால் இந்த லிங்கம் ஈஷான்ய லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்தையும் அடைந்த நிலையில், எதுவும் நிரந்தரமில்லை என உணர்த்தும் வகையில், அமைதியை தேடுவதற்கு உரிய இடமாக உள்ளது. இந்த திசையின் அதிபதி புதனாகும். இங்கு வந்து வேண்டி கொள்பவர்களுக்கு மன நிம்மதி ஏற்படும்.

கிரிவல பாதையின் பயன்கள்Benefits of Girivalam

Tiruvannamalai Girivalam

கிரிவலம் சென்றால் நம் செய்யத பாவங்களின் கடுமைகள் குறையும். கிரிவத்தின் போது ஜீவராசிகளுக்கு அன்னமிடுவது போன்றவைகளால் நமக்கு புண்ணியம் சேரும். நாம் நீண்ட நாட்களாக வேண்டியிருந்த பிராத்தனை நிறைவேற அந்த கடவுளை நினைத்தக்கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கிரிவல பாதையை மேற்கொள்ளலாம். இயற்கையாகவே மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும்.

மேலும் படிக்க: Kashi Vishwanath Temple: காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு..!

FAQS

1. சுயம்பு லிங்கம் என்றால் என்ன? What is the meaning of Suyambu lingam?

சுயம்புலிங்கம் என்பது மனிதர்களால் செய்யப்படாமல் இயற்கையாக தோன்றிய லிங்கம் ஆகும்.

2. கிரிவலத்திற்கு செருப்பு அணியலாமா? Can I wear slippers for Girivalam?

காலணிகளை அணிந்து கிரிவலம் மேற்கொள்ள கூடாது. ஏனெனில் உங்கள் உடலை புனித பூமியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் ஒர சிலரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் செல்லலாம். சிவபெருமானை மனதில் வைத்து கிரிவலம் செய்யுங்கள்.

3. திருவண்ணாமலையில் தரிசன நேரம் என்ன? Tiruvannamalai Temple Timings?

காலை 5:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 3:30 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபடுவதற்காக கோயில் திறந்திருக்கும்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular