தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரை திரைப்படத்துறையினர் மற்றும் ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் தற்போது நடித்து வரும் படம் தான் தலைவர் 171 (Thalaivar 171). இந்த படத்தின் டைட்டில் இன்று (22.04.2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூபாய் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்து வரும் படம் தான் வேட்டையன். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது.
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவரின் 171 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தனது இயக்கத்தின் மூலம் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை முன்னணி நடிகர்களை கொண்டு கொடுத்துவரும் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்குகிறார்.
தலைவர் 171 (Thalaivar 171 Title) படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் படங்களை தொடர்ந்து 6 வது முறையாக இந்த ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது (Rajinikanth Next Movie Update). இந்த தலைவர் 171 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இன்று மாலை இந்த தலைவர் 171 படத்தின் டைட்டில் வெளியாகும் (Thalaivar 171 Title Relese Date) என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்புகள் 10 நாட்களுக்கு முன்பே படக்குழுவினர் ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் ப்ரோமோ 45 வினாடிகள் இருக்கும் எனவும் அந்த ப்ரோமோவில் அனிருத் போட்டிருக்கும் பிஜிஎம் அருமையாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.
Brace yourselves!#Thalaivar171TitleReveal Teaser dropping tomorrow 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv#Thalaivar171 pic.twitter.com/DoGCQvVGlg
— Sun Pictures (@sunpictures) April 21, 2024