செய்திகள்

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..! ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்..!

தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு. தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும். ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர், அதில் 3 கோடி ஆண்களும், 3 கோடியே 10 லட்சம் பெண்களும், 8,016 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனவும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் எனவும் கூறினார்.

நவம்பர் 9 ஆம் தேதி அனைத்து வாக்குசாவடியிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டடியலில் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆம் தேதி சிறப்பு முகாம்கள் வாக்குசாவடி மையங்களில் நடைப்பெறும் அப்போது பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால், பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் இருந்தால் நேரில் சென்று படிவம் 6 -ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது தேர்தல் கமிஷனின் eci.gov.in

இணையதளம் மூலமாகவும் அல்லது Voter Helpline App என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். 17 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம், 18 வயது பூர்த்தியாகும் காலாண்டில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். டிசம்பர் 9 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறினார்.
Abinaya G

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago