Homeசெய்திகள்உலக முத்தமிழ் முருகன் மாநாடு..! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..!

உலக முத்தமிழ் முருகன் மாநாடு..! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் உலக முத்தமிழ் மாநாடு (Muthamizh Murugan Maanadu 2024) நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள 45,477 திருக்கோயில் பணியாளர்களுக்கு முழு உடற் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழ் நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. இது அடுத்த 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு உலக முருகன் மாநாடு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை தமிழகத்திற்கு அழைத்துவர இருப்பதாக கூறினார். இது வரை இந்து சமய அறநிலை துறை வரலாற்றில் நடைபெறதாத நிகழ்வினை பழனியில் (Palani Muthamizh murugan maanadu) நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருக பெருமானை வழிபடும் உலகம் முழுவதும் முருகன் கோயில்களை பராமரிக்கும் பக்தர்களையும் அழைத்து, இரண்டு நாட்கள் இந்த மாநாட்டை நடத்த உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Palani muthamil murugan maanadu

அதுமட்டுமல்லாமல் கிராமத் தெய்வங்களான குலத்தெய்வங்களின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளும் வகையில், அதற்கான புத்தகங்கள் வெளியிடப்படும் என்றும், வரலாறு புத்தகங்களுக்கு தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை (ulaga muthamizh murugan maanadu) நடத்துவதற்கான பணி தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்தார்.

மேலும் படிக்க: Ramadan 2024: இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடக்கம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular