செய்திகள்

நாளை தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா..! எந்தெந்த படங்களுக்கு விருது..!

தமிழக அரசு சார்பில் அனைத்து வைகையான கலைகளையும் ஊக்கப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைள் தொடர்ந்து செய்து வருகிறது. விளையாட்டு முதல் கலை மற்றும் அறிவியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பல துறைகளில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களை பாராட்டும் விதத்திலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் தான் நாளை தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (Tamil Nadu Govt Film Awards Ceremony) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியானது நாளை (06.03.2024) அன்று நடைபெறவுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் கலந்துக்கொண்டு விருதுகளை வழங்கவுள்ளார். இதன் வாயிலாக மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம் மற்றும் நினைவுப் பரிசு, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் கடந்த 2015-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் (Tamil Nadu Film Awards 2015) ஆகும்.

இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதுகள் பட்டியலில் முதல் பரிசு கடந்த 2015- ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்திற்கு வழங்கப்படவுள்ளது. இரண்டாம் பரிசு 2015-ம் ஆண்டு வெளியான பசங்க 2 படத்திற்கும் மூன்றாம் பரிசு 36 வயதினிலே படத்திற்கும் வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி இன்னும் பல பிரிவுகளின் கீழ் பல விருதுகள் வழங்கப்படவுள்ளது.

சிறந்த நடிகர்மாதவன் (இறுதிசுற்று)
சிறந்த நடிகைஜோதிகா (36 வயதினிலே)
சிறந்த வில்லன்அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
சிறந்த நடிகர் சிறப்பு பரிசுகௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுசிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்)
சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
சிறந்த ஒளிப்பதிவாளர்ராம்ஜி (தனி ஒருவன்)
சிறந்த பின்னணிப் பாடகர்கானா பாலா
சிறந்த பின்னணிப் பாடகிகல்பனா ராகவேந்தர்
சிறந்த பாடலாசிரியர்விவேக்

இவர்கள் மட்டுமின்றி மொத்தம் 27 திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியானது சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில், நாளை நடக்க உள்ளது.

இதையும் படியுங்கள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago