Homeசெய்திகள்32 அரசு பள்ளிகள் திடீரென மூடல்..! தமிழக அரசு அதிரடி..!

32 அரசு பள்ளிகள் திடீரென மூடல்..! தமிழக அரசு அதிரடி..!

கல்வி தற்போது படிப்படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. மேலும் சிலர் அரசு பள்ளிகளில் கற்பிப்பு சரியாக இருப்பது இல்லை என்று கூறுகின்றனர். இதன் காரணமாகவும் பல அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தான் தற்போது 32 அரசு பள்ளிகளை மூட (Schools Suddenly Closed) அரசு முடிவு செய்துள்ளது. அனால் இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வித் துறை முடிவு (32 Government Schools Closed Issue) செய்துள்ளது.

இந்த நடவடிக்கையில் முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 32 பள்ளிகள் மூடப்பட (Kallakurichi Government Schools Closed Issue) உள்ளன. கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த வருட சேர்க்கை வீதமானது, தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவை விட மிகவும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை உடனடியாக மூட அரசு முடிவு செய்துள்ளது.

32 Government Schools Closed Issue

இந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒரு பள்ளியில்,

வகுப்பு குறைந்த பட்ச மாணவர்கள்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை30 மாணவர்கள்
ஆறு முதல் எட்டு வரை35 மாணவர்கள்
ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு40 மாணவர்கள்
11 மற்றும் 12 வகுப்பு 50 மாணவர்கள்

இந்த எண்ணிக்கை கீழ் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை தமிழக பள்ளி கல்வித்துறை மூட (Government Schools Closed) முடிவு செய்துள்ளது. அரசின் இந்த பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படியுங்கள்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 11000 நிதியுதவி..! மத்திய அரசு அறிவிப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular