இன்றைய காலத்து குழந்தைகள் துரித உணவுகள் போன்ற உணவுகளை தான் அதிக அளவில் விரும்பி உண்ணுகின்றனர். அதிலும் இந்த தெருவோரத்தில் உள்ள கடைகளில் உள்ள உணவுகள் என்றால் சொல்லவே தேவையில்லை விரும்பி உண்ணுவர். அதுப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட விரும்பும் ஒரு பொருள் தான் இந்த ஸ்மோக் பிஸ்கட்.
இந்த பிஸ்கட்களை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். இந்நிலையில் தான் தற்போது இந்த பிஸ்கட்டை குழந்தைகள் உண்பதன் மூலம் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுப்போன்ற திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை குழந்தைகள் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருள்ள திசுக்களுடன் திரவ நைட்ரஜன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை அது உருவாக்கும் அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும். எனவே திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்பனை செய்ய கூடாது என்றும் அவ்வாறு விற்பனை செய்தாலே அல்லது பயன்படுத்தினாலே 10 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது போன்ற ட்ரை ஐஸ் குழந்தைகள் உட்கொள்வதன் மூலம் கண் பார்வை மற்றும் பேச்சு ஆகியவை பறிபோகும் ஆபாயம் உள்ளது என்றும் கூறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்: முதன் முதலில் YouTube-ல் பதிவேற்றப்பட்ட வீடியோ எது தெரியுமா? |