தமிழகத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அரசு எதிராக போராட்டம் நடத்திய ஆசியரியர்களின் சம்பளம் மற்றும் பிற படிகளையும் பிடித்தம் செய்ய தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி முதல் மார்ச் 08- ஆம் தேதி வரை சம ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழகத்தில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பளங்களில் முரண்பாடுகள் உள்ளதாகவும், இதனை சரிசெய்ய வேண்டும் என்று கடந்த மாதங்களில் ஆசிரியர்கள் போராட்டம்( Arasu Palli Asiriyargal Porattam) நடத்தினார்கள்.
ஆசியர்கள் தமிழகத்தில் போராட்டம் நடத்துவது கடந்த ஆண்டிலிருந்தே நீடித்து வருகிறது. அதாவது தமிழக அரசு கடந்த தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறவேற்றவில்லை போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு போராட்டங்கள் நடைபெற்று பிறகு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த போராட்டம் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும், மாவட்டங்கள் வாரியாக நடைபெற்றது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் மார்ச் 8 தேதி வரை நீடித்தது. பிறகு அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டது. எந்தவொரு முன்னறிவிப்பு இன்றி நடத்தப்பட்ட ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 19 நாட்களுக்கான சம்பளம் மற்றும் பிற பணப்பலனை பிடித்தம் செய்ய தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாட்களை சம்பளமில்லாத விடுப்பாக பதிவேட்டில் பதிய வேண்டும் மற்றும் சம்பளம், பிறபணப்பலன்களை ஒரே தவணையாக பிடித்தம் (Arasu palli asiriyargal sambalam piditham) செய்ய வேண்டும் போன்ற உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்..! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..! |