தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு நடைபெற்று மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோடை வெப்பமும் அதிகமாக உள்ள நிலையில் இந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகலாம் (Important Instructions for Private School in TN) என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததன்படி பள்ளிகளில் கோடை கால விடுமுறையில் யாரும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறக்க 1 மாதம் காலம் உள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளின், பள்ளி வானங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வெளியிட்ட அறிவிப்பின்படி பள்ளி திறக்க ஒரு மாதம் காலம் உள்ளதால், தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து (Thaniyar Pallikalukku Mukkiya Arivippu) வாகனங்களை நன்றாக பராமரித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.