இந்தாண்டு தமிழகத்தில் வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கோடை வெப்பத்தினை தாங்கி கொள்ள முடியாமல் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வரும் 14-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலக் கிழடுக்கு சுழற்சி காற்றின் திசை மாறுபாடு நிகழ்கிறது. தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு (Summer Rain in TN) வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
அதே சமயத்தில் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் புறநகர் பகுதியில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹூட்-ஐ ஒட்டியும் 80 டிகிரி ஃபாரன்ஹூட்- அளவை ஒட்டியும் இருக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை (Thamizhagathil veppa nilai 2024) குறையும் என்று தெரிவித்திருந்தது. இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதியில் வெப்பத்தின் அளவு 37 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அனல் காற்று வீசக்கூடும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலார்ட் (yellow alert in Tamil Nadu) கொடுத்துள்ளது.