செய்திகள்

கம்போடியாவில் வேலைவாய்ப்பு..! உஷாரா இருந்துக்கோங்க..!

தற்போது உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமாகிவிட்டது. நல்ல மதிப்பெண் எடுத்து சொந்த நாடுகளில் படித்து வேலை பார்ப்பவர்களும் உள்ளனர். அதேசமயம் படித்து முடித்துவிட்டு அல்லது படிப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களும் உள்ளனர்.

இவ்வாறாக வேலைகளை தேடி சவுதி, கத்தார், லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிகளவில் இளைஞர்கள் செல்கின்றனர். கடந்த ஆண்டுகளில் தமிழத்தில் இருந்து பல பேர் போலி ஏஜெண்டுகளிடம் சிக்கி கொண்டுள்ளனர். முதலில் ஒரு நல்ல வேலை, சம்பளம் என கூறி பணத்தையும் கட்டி வெளிநாடு சென்று அங்கு பல தமிழர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அங்கு சென்றதும் அவர்கள் சொல்லும் வேலைகளை பார்த்துக்கொண்டும், கொடுக்கும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

ஒருசிலர் தாங்கள் ஏமற்றப்பட்டதை உணர்ந்து தங்கள் வீட்டில் உள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எப்படியாவது வெளிநாட்டில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என அழுது புலம்புகிறார்கள். பிறகு காவல் துறையை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறி அவர்களை மீட்க போராட வேண்டியுள்ளது. ஆனால் அவர்களை காப்பாற்றுவது அவ்வளவு சுலபமில்லை. அந்த நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு பல பேச்சுவார்த்தைகளை நடத்தி சட்ட ரீதியில் அவர்களை மீட்க வேண்டும்.

இந்நிலையில் தான் கம்போடியா விவகாரம் பெரிய பிரச்சனையாக உள்ளது. சமூக வலைதளங்கள் வழியாக பல பொய்யான தகவல்களை கொடுத்து வேலை தேடுபவர்களை குறி வைத்து பல ஆசை வார்த்தைகளை கூறி அவர்கள் கம்போடியாவிற்கு (Cambodia job vacancy) வரவழைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் தான் கம்போடியா தலைநகரில் நோம் பென்னில் அமைந்துள்ள இந்திய தூதரகம் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளயிட்டுள்ளது. அந்த அறிவிப்பை தமிழக காவல் துறை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் போலியான வாக்குறுதிகளை நம்பி கம்போடியாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் இங்கு வந்த பிறகு அவர்கள் சிக்கி கொள்கின்றனர். கடைசியில் தான் அவர்கள் தாங்கள் போலியான (Cambodia Fake job News) ஏஜெண்டுகளிடம் சிக்கி கொண்டதாக உணருகிறார்கள்.

இங்கு வந்த பிறகு இவர்களின் பாஸ்போர்ட் பெரும்பாலும் பறிக்கப்படுகின்றன. மற்றும் கடுமையான பணிச்சூழல், உடல் மற்றும் மன சித்திரவதைக்கு ஆளாகின்றனர். தொடர்ச்சியான அச்சுறுத்தலின் காரணமாக இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள்.

கம்போடியாவிற்கு வேலைக்கு செல்ல நினைக்கும் இந்தியர்கள் முதலில் ஏஜெண்டுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள், நிறுவனங்கள் மூலம் மட்டுமே அவர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் சரிபார்த்த பிறகு தான் கம்போடியாவிற்கு வரலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தமிழகத்தில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago