தமிழகத்தில் உள்ள 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன (Public Exam) . தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் உள்ளனர்.
கடந்த மார்ச் 01 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கு இடையில் மார்ச் 04 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.
அதன் பிறகு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வுகளில் 12 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. வரும் 06 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அரசு தேர்வுகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Public Exam Result) வெளியாகும் என கூற்ப்பட்டுள்ளது.
அதேபோல் 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று முடிவடிவடைந்துள்ள நிலையில் மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணிகள் தான் நடைபெற்று வருகின்றன. இந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 103 மையங்களில் நடைபெற்றது என அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் (Public Exam Result 2024) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் 10 வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். நேற்று விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்கள் அனைத்து பாட மதிப்பெண்களையும் கணினி வாயிலாக இணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
அரசு தேர்வுகள் துறை ஏற்கனவே அறிவித்தபடி வரும் 10 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் (10th Exam Result 2024) வெளியாக உள்ளன. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் SMS மூலமாக தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அனைவருக்கும் All Bass..! முக்கிய அறிவிப்பு வெளியானது..! |