Homeசெய்திகள்ஆசிரியர்களுக்கு வார்னிங்..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

ஆசிரியர்களுக்கு வார்னிங்..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு வெப்பநிலை அதிகளவில் இருப்பதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆசிரியர்களுக்கு (Govt School Teacher) முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பள்ளிக்கல்வித்துறை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்க கல்வி இயக்குநர்களுடன் இணைந்து (TN Govt Announcement) வெளியிட்டுள்ளது. இந்நத வழிகாட்டலில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி பள்ளிக்கல்வித்துறை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வி இயக்கமும், தொடக்கக் கல்வி இயக்கமும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளன. இதன்படி பள்ளிக் கல்வி இயக்குநர் க. அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (Elementary School Teachers) சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய குழுந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், பள்ளி குழந்தைகளின் நலனை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை உடல் ரீதயாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது என்றும், அவ்வாறு தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் நல்ல முறையில் நடந்துக்கொள்வதற்கு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் வாழ்வியல் திறன் கல்வி அளிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குழுந்தைகள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க புகார் பெட்டி பள்ளிகளில் அமைக்க வேண்டும் என்றும், கடினமான வார்த்தைகளால் அவர்களை திட்டக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. குழந்தைகளை எந்த வகையிலும் அடிக்க மாட்டோம் என்று ஆசிரியர்களிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் உறுதிமொழி (New rules for Govt School teacher in TN) பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Govt School Teacher
மேலும் படிக்க: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்த குட் நியூஸ்… மகிழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular