Homeசெய்திகள்பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லையா? உடனே கால் பண்ணுங்க…

பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லையா? உடனே கால் பண்ணுங்க…

ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு செல்ல போக்குவரத்துக்கு பொரும்பாளும் அனைவருக்கும உதவுவது பேருந்துகளே ஆகும். இந்த பேருந்துகள் சில சமையம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் போகிறது என புகார்கள் போக்குவரத்து துறையினருக்கு (Tamil Nadu Transport Corporation) புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக போக்குவரத்து துறை பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு எண்ணை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசு போக்குவரத்து பேருந்து சேவை ஆனது மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் மொத்தமாக 625 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த 625 வழித்தடங்களில் மொத்தம் 3,436 பேருந்துகளுக்கு மேல் நாள் முழுவதும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து சேவை மூலம் நாள்தோறும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன் பெறுகிறார்கள் என கூறப்படுகிறது.

இந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு போக்குவரத்து கழகம் பல சேவைகளை தருகிறது. பென்களுக்கான கட்டணம் இல்லா விடியல் பேருந்து சேலை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ், முதியவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவை, ஒரு நாள் மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் சீசன் டிக்கெட் போன்ற பல திட்டங்களை மாநகர போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்காக செல்படுத்தி வருகிறன்றது.

இந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடர்பாக அல்லது பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் போல்லோ பொதுமக்கள் தங்கள் புகார்களை மாநகர போக்குவரத்து கழகத்திடம் தெரிவிக்க 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி (Toll-Free Complaint Number) எண்ணை அறிவித்துள்ளது போக்குவரத்து கழகம்.

Toll-Free Complaint Number
மேலும் படிக்க: இனி இவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது..! அதிர்ச்சி தகவல்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular