Homeவேலைவாய்ப்பு செய்திகள்டிகிரி முடித்தவர்களுக்கு (TN TRB) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 4000 காலிப்பணியிடங்கள்…உடனே விண்ணப்பிக்கவும்…

டிகிரி முடித்தவர்களுக்கு (TN TRB) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 4000 காலிப்பணியிடங்கள்…உடனே விண்ணப்பிக்கவும்…

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TN TRB Recruitment 2024 அறிவிப்பின் படி 4000 உதவி பேராசிரியருக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியருக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக TN TRB Recruitment Official Notification -ஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. TN TRB Job Notification -ன் படி பல்வேறு துறைகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் படி நிரப்பப்படவுள்ள Assistant Professor -க்கான கல்வித்தகுதி ஒவ்வொரு துறைகளை பொறுத்து மாறுபடுகிறது. முக்கியமாக முதுகலைப் பட்டம், பிஎச்டி. பட்டம் முடித்தவர்கள் இந்த பதவிக்கி விண்ணப்பிக்கலாம். மேலும் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 57 ஆகும்.

TN TRB Recruitment 2024 -ன் படி காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் முறையில் விண்ணபிக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 28.03.2024 முதல் 29.04.2024 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி 04.08.2024 ஆகும். TN TRB Recruitment 2024 அறிவிப்பின் படி 4000 உதவி பேராசிரியருக்கான (Assistant Professor) காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பதவிக்கான சம்பளம் 57,700 முதல் 1,82,400 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த TN TRB Recruitment பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ள Official Notification -ஐ முழுமையாக பார்க்கவும்.

டிகிரி முடித்தவர்களுக்கு (TN TRB) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 4000 காலிப்பணியிடங்கள்…உடனே விண்ணப்பிக்கவும்…

TN TRB Recruitment 2024 அறிவிப்பின் படி உதவி பேராசிரியருக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Salary: 57700 - 182400

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-03-30

Posting Expiry Date: 2024-04-29

Employment Type : FULL_TIME

Hiring Organization : Tamil Nadu Teachers Recruitment Board

Organization URL: https://trb.tn.gov.in/

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, 3rd & 4th Floor, Puratchi Thalaivar Dr.M.G.R. Centenary Building, Perasiriyar Anbazhagan Kalvi Valagam, College Road, Nungambakkam, Chennai , 600006, India

Education Required:

  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: இந்திய உளவுத்துறையில் பணிபுரிய வேண்டுமா..! உங்களுக்காக 660 காலிப்பணியிடங்களை வெளியிட்டுள்ளது..! மிஸ் பண்ணிடாதீங்க
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular