தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் பல வகையான போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி ஆட்சேர்ப்பு முறையாகும். இந்த நிலையில் இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் -1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி (TNPSC Group-1 Exam Date) அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வு குறித்த அறிவிப்பானது கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியானது. கடந்த வருடம் குரூப் 1 முதல்நிலை தேர்வுகள் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. அதன் பிறகு முதன்மை தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் தற்போது இந்த வருடத்திற்கான TNPSC Group-1 Thervugal குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. TNPSC குரூப் 1 தேர்வு மூலம் நிரப்படவுள்ள மொத்த காலிப்பணியிடங்கள் 94. மேலும் TNPSC Group 1 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Group-1 Prelims Exam வருகின்ற ஜூலை 13-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மொத்தம் 95 காலிப்பணியிடங்க்கு 2,133 பேர் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த மற்ற விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இதையும் படியுங்கள்: DSWO அலுவலகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை..! கட்டணம் இல்லை தேர்வு இல்லை..! |