ரம்ஜான் பண்டிகை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் வியாழக்கிழமை அன்று (11.04.2024) கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதாலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்கயிலில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதற்காக சிறப்பு பேருந்துகளை (Special Buses for Ramadan) இயக்க தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
நாளை (11.04.2024) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முஸ்லிம்கள் கொண்டாடும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு இன்று (10.04.2024) 315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபால் வரும் 12 ஆம் தேதி 290 சிறப்பு பேருந்துகளும், 13 ஆம் தேதி 340 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துக் கழகம் (TN Special Buses for Ramadan) அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர், வேளாங்கண்ணி போன்ற இங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு தலா 40 பேருந்துகள் என 120 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் Tamilnadu State Transport Corporation திட்டமிடப்பட்டுள்ளது.