Homeசினிமா“Tourist Family” – சிரிப்பு, உணர்ச்சி, ரசனை மூன்றையும் கலந்து கொடுத்த அற்புதமான திரைப்படம்: ராஜமௌலி...

“Tourist Family” – சிரிப்பு, உணர்ச்சி, ரசனை மூன்றையும் கலந்து கொடுத்த அற்புதமான திரைப்படம்: ராஜமௌலி நேரடி பாராட்டு!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் உணர்வும் நகைச்சுவையும் கலந்த ஒரு அழகான குடும்ப படமாக ரசிகர்களின் மனங்களை தொட்ட திரைப்படம் தான் ‘Tourist Family’.

ஃபேமிலி ஆடியன்ஸை பெரிதும் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் MRP என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. குடும்பங்கள் மத்தியில் நெருக்கமாக பேசப்படும் உணர்வுகளையும், துயரத்தையும் நேர்த்தியாக படம் பிடித்த இந்த படம், அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தஞ்சம் தேடி வரும் ஒரு குடும்பத்தின் பயணத்தை மையமாகக் கொண்டு நகரும் இந்த கதை, நகைச்சுவையுடனும், ஆழமான உணர்வுகளுடனும் திரைப்படம் முழுவதும் சீராக ஓடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்துள்ள நடிகர்கள் தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். இவர்களின் மெருகூட்டிய நடிப்பும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும், இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியிருக்கின்றன.

அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது. உணர்வுகள் கலந்த நகைச்சுவை, எளிமையான சித்தரிப்பு, மனதுக்குள் பதிந்த கதையமைப்பு ஆகியவையால் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் குறித்து ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தும், சிவகார்த்திகேயனும் நேரில் பாராட்டிய நிலையில், தற்போது இயக்குநர் ராஜமௌலியும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“Tourist Family – ஆரம்பத்திலிருந்து முடிவுவரை என்னை ஈர்த்த திரைப்படம். மனதைத் தொடும் உணர்வுகளும், குலுங்கி சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் சிறப்பாக கலந்திருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் பார்த்த சிறந்த சினிமா அனுபவம் இது” எனப் பதிவிட்டுள்ள அவர், இயக்குநரின் எழுத்தும், இயக்கமும் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். ஒரு தொடக்க இயக்குநருக்காக இது மிகப்பெரிய பாராட்டு என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

RELATED ARTICLES

Most Popular