சமீப காலமாக இந்தியாவில் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் ரயில் விபத்துகள் (Train Accident) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் தான் கடந்த வருடம் நவம்பர் மாதம் நவம்பர் மாதம் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது.
இந்த விபத்தில் விஜயநகரத்திலுருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள ராய்கடா என்ற இடத்திற்கு இயக்கப்பட்ட ரயில் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பலாசா என்ற இடத்திற்கு விசாகப்பட்டினத்திலுருந்து சென்றுக்கொண்டிருந்த ரயில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக தான் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் ரயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சரக்கு ரயில் ஒன்று கவிழ்ந்து (Train Accident in Delhi) விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து டெல்லி பட்டேல் நகருக்கு அருகே ரயில் சென்றுக்கொண்டு இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 8 பெட்டிகள் மொத்தமாக கவிழ்ந்து உள்ளது. மேலம் வளைவில் ரயில் வேகமாக திரும்பியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது சரக்கு ரயில் என்பதால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் இந்த விபத்து அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: வாகன விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..! |