HomeசினிமாThe GOAT: மீண்டும் இணையும் திரிஷா மற்றும் விஜய்..! திரிஷாவுக்கு என்ன கதாபாத்திரம்..!

The GOAT: மீண்டும் இணையும் திரிஷா மற்றும் விஜய்..! திரிஷாவுக்கு என்ன கதாபாத்திரம்..!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஜய் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தனது அடுத்தப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு GOAT – The Greatest of All Time என்று வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. GOAT படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டர் மூலம் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு இந்த மாதத்தின் இறுதிக்குள் நிறைவடையும் என்று தெரிகிறது. மேலும் இந்த படத்தில் முதல் பாடல் மே மாதம் வெளியாக இருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்த பாடலுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த GOAT படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க தற்போது இந்த படத்தில் ஒரு கேமியோ ரோல் உள்ளதாக தகவல் (GOAT Movie Update) வெளியாகியுள்ளது. இந்த கேமியோ ரோலில் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் (Actress Trisha in GOAT Movie) வெளியாகியுள்ளது.

Trisha in GOAT Movie

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் நடனமாடும் ஒரு பாடலில் தான் த்ரிஷா சேர்ந்து நடனமாட உள்ளார் (Trisha in GOAT Movie) என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் படக்குழுவின் சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த தகவல் உண்மையா என்பதை அறிய நாம் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: Shaitaan Box Office Collection: வெளியான 6 நாட்களில் 100 கோடி..!

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular