நாடு முழுவதும் நேற்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்கு உள்ளனான இந்த மசோதா, லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த சட்டம் நிறைவேறியுள்ளதாக அறிவிப்பு அரசிதழில் வெளிவந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை பெற்றது. அப்போது சர்ச்சைக்குரிய இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா (Kudi urimai sattam thiruththa masodha in tamil) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சிஏஏ என்னும் குடியுரிமை திருத்த சட்டம்
1955 ஆண்டு அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த (Citizenship Amendment Act) மசோதாவை மீண்டும் கடந்த 2019-ல் சில மாற்றங்களை செய்தது மத்திய அரசு. இந்த சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு தஞ்சம் தேடி வரும் இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கமாகும். இதில் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் அடைந்த, மேலே கூறப்பட்டுள்ள மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை.
முஸ்லீம்கள் சேர்க்கப்படாததால் நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக முஸ்லீம் நாடுகளில் இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மற்ற மதங்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் போது ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் வழங்கவில்லை போன்ற காரணங்களால் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களின் போது 100-ம் மேற்பட்டவர்கள் இறந்து போனார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுதுவதை மத்திய அரசு ஒத்தி வைத்திருந்தது. அதுமட்டமல்லாமல் கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்த சட்டம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
#CitizenshipAmendmentAct pic.twitter.com/4iO2VqQnv4
— TVK Vijay (@tvkvijayhq) March 11, 2024
இந்நிலையில் அவர் இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும். இவ்வாறாக தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: இதுனால தான் இந்த பெயரை விஜய் கட்சிக்கு தேர்வு செய்தாரா..! |