தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் காரணமாக தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக நிவாரண நிதி ரூ.5லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்கபட்டு கால்நடை இழந்தவர்கள் மற்றும் விளைநிலங்களில் பயிர் சேதமடைந்தவர்களுக்கு (udhayanidhi mazhai vella nivaranam) நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு (udhayanidhi mazhai vellam Aaivu) நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் தொடர்ந்து பத்து நாட்களாக களத்தில் நிவாரணப் பணிகளை செய்கிறார்கள். இதில் அரசியல் வேண்டாம். தமிழிசை செளந்தரராஜன் அரசியல் காரணமாக பேசுகிறார். இதில் அரசியல் செய்ய வேண்டாம். 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. மக்களுக்கு தெரியும் என்ன பணிகள் நடக்கிறது என்று, மக்கள் புரிந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்கள் நாளை வெள்ளம் பாதிப்பை பார்வையிட வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பேரிடர் இல்லை என கூறிய மத்திய நிதி அமைச்சர் நாளை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருகிறார் என கூறினார். தமிழக முதல்வரிடம் பிரதமர் தொலைபேசி வாயிலாக வெள்ள பாதிப்பு நிலவரங்களை கேட்டுள்ளார். அவரிடம் நிவாரணப் பணிகளின் நடவடிக்கை என அனைத்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு (nirmala sitharaman vellam aaivu) செய்த பிறகு வெள்ள பாதிப்பிற்கான தகுந்த நிவாரண நிதியை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார்.