செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்…! உதயநிதி கருத்து..!

உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இக்கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுர அடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இக்கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது (Ramar Temple Kumbabishekam in Tamil). இந்த குழந்தை ராமர் சிலை ஆனது 8 அடி உயரம், 3 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் கொண்டதாகும். மேலும் இந்த ராமர் கோவில் வருகின்ற (Ayothi Ramar Temple Opening Date in Tamil) ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பகல் 12.20 மணிக்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது. இந்த கோயில் முழுக்க முழுக்க உள்நாட்டு பாரம்பரிய மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் போன்ற பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு வருகின்ற லோக்சபா தேர்தலுக்கு பாஜகவின் யுக்தி என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இதனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உதயநிதியிடம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பிதழ் வந்துள்ளதா என கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த உதயநிதி இதுவரை எங்களுக்கு எந்த அழைப்பிதழும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் எவரும் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் இன்னும் கட்டிமுடிக்கப்படாத கோயிலை பாஜகா மற்றும் ஆர்.எஸ்.எஸ் திறந்து வைப்பது அரசியல் லாபத்திற்காக மட்டும் தான் என தெரிவித்துள்ளது.

இந்திய கூட்டணி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை (Ayothi Ramar Temple Opening Ceremony) புறக்கணித்ததற்கு பாஜக கடும் விமர்சனங்களை செய்து வருகிறது.

மேலும் படிக்க: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வீட்டிற்கு சென்று அழைப்பு..! யாருக்கு தொரியுமா?
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago