Homeசெய்திகள்அவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தூங்க மாட்டேன்..! உதயநிதி பேச்சு..!

அவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தூங்க மாட்டேன்..! உதயநிதி பேச்சு..!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் திமுக கட்சியின் சார்பாக திருவண்ணாமலையில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதரித்து இன்று மார்ச் 26 -ஆம் தேதி உதயநிதி பிரச்சாரம் (Udhayanidhi Pracharam) செய்தார்.

அப்போது பேசிய உதயநிதி, பிரதமர் மோடி திமுகவுக்கு தூக்கம் போய்விட்டது என்று கூறுகிறார். ஆமாம் அவர் சொல்லுவது போன்று எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. நாங்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பும் வரை தூங்க போவதில்லை என்று கூறினார்.

திருவண்ணாமலையில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதாதரித்து (Tiruvannamalai DMK Vetpalar 2024), அவருக்கு வாக்கு கேட்டு கலைஞர் பேரன் வந்திருக்கிறேன். அவரை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டார். அவ்வாறு வெற்றி பெற செய்தால் நான் மாதம் 2 முறை இந்த தொகுதிக்கு வந்து தங்கி தொகுதியில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்வேன் என்று கூறினார்.

Udhayanidhi Pracharam

தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சி தலைவர் எப்போது பார்த்தாலும் உதயநிதி (Udhayanidhi Stalin) செங்கல் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு வேலையில்லாமல் காண்பித்து வருவதாக கூறி வருகிறார். நான் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை காண்பித்து தான் வருவேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் மோடியுடன் சிரித்துக்கொண்டு கூட்டணி வைத்து மாநிலத்தின் மொழி உரிமை மற்றும் நிதி உரிமையை தாரைவார்த்து கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறினார்.

தற்போது தேர்தல் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார். ஆனால் மழை, வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி எங்கு சென்றார். மழை, வெள்ளத்தில் முதலமைச்சர் தான் மக்களுக்கு உதவிகளை செய்தார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் திருவண்ணமலை தேர்தல் அறிக்கையில் (Tiruvannamalai DMK Therthal Pracharam 2024) கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறவேற்றப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க: முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரே தொகுதியில் பிரசாரம்… எந்த ஊர் தெரியுமா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular