தமிழகத்தில் மக்களவை தேர்தல் (Makkalavai Therthal 2024) ஏப்ரல் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தில் முக்கிய கட்சிகள் எல்லாம் ஓய்வில்லாமல் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கென்றே ஒரு தனி பயத்திட்டங்களை வகுத்து அதற்கு ஏற்றார் போல அவர்களின் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். கூட்டணி கட்சிகள் ஒருபுறமும், தனித்து போட்டியிடும் கட்சிகள் ஒருபுறமும் மாறி மாறி பிரச்சாரங்களில் தங்களை ஈடுப்படுத்தி கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக-வும் அதன் பங்கிற்கு பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்கு சேகரிப்பிற்காக மத்தியில் உள்ள தலைவர்களும் தமிழகத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுகாவின் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து காட்டூர் பகுதியில் திமுக விளையாட்டு துறை அமைச்சர் (Udhayanidhi Pracharam) உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்தார். அப்போது பெண் செல்பி கேட்க உதயநிதி ஸ்டாலின் உடனே மக்களுடன் ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்.
அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக உதய சூரியன் சின்னத்தில் உங்களை வாக்குகளை செலுத்துங்கள் என்று கூறினார். அதற்கு அங்கு உள்ள பொதுமக்கள் தீப்பெட்டி சின்னம் என்று கூச்சலிட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மன்னியுங்கள் அனைவரும் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.
இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.