தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து தற்போது அரசியலில் குதித்து அமைச்சராக இருப்பவர் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் தற்போது 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
கடந்த வருடம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிப்பெற்றது. அதன் பிறகு நடிகர் சங்கத்திற்கு மிகப்பெரிய கட்டிடம் கட்ட முடிவு செய்தது. இதற்காக சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நிதி நெருக்கடி காரணமாக திடீரென இந்த கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. இதன் காரணமாக நடிகர் சங்க உறுப்பினர்கள் இந்த கட்டிடத்தை கட்டுவதற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உதவும் விதத்தில் நிதியுதவி வழங்கியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகிய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் இதற்கு தெரிவிக்கும் விதமாக தென்னெந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவில் “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காகவும், முடிந்தவரை விரைவாக கட்டிடம் கட்டும் பணிகளை முடிக்க உதவ முன் வந்ததற்காகவும் நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்: நாளை நாடு முழுவதும் பந்த்..! பள்ளிகளுக்கு விடுமுறை பற்றிய தகவல்..! |