Ulunthankali Recipe: நம் உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவு பழக்க வழக்கங்களை தான் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். ஆனால் அந்த உணவு முறைகள் எல்லாம் காலப்போக்கில் காணாமல் போது இதன் காரணங்களால் தான் அனைவருக்கும் சிறு வயதிலேயா உடல் சேர்வு, வழி போன்றவை ஏற்படுவகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உளுந்து சேர்த்துக்கொண்டால் உடல் வலிமை பெரும். உளுந்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
உளுந்து மிகவும் அதிகம் இரும்பு சத்துள்ள உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய தானியம் ஆகும். பெண்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், விவசாயம் செய்பவர்கள் போன்ற உடல் உழைப்பு அதிகம் கொண்டவர்கள் இந்த உளுந்தங்களி (Ulunthankali) செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த உளுந்து களியை வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது செய்து சாப்பிட வேண்டும்.
உளுந்தங்களி மிகவும் நார்ச்சத்து நிறைந்தது ஆகும். நம் முன்னோர்கள் உண்ட உளுந்தங்களி போல் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய சுவையான உளுந்தங்களி செய்வது எப்படி (Ulunthankali Recipe in Tamil) என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Table of Contents
உளுந்தங்களி செய்வது எப்படி (How To Make Ulunthankali) Ulunthankali Recipe
உடலுக்கு அதிகமான இரும்பு சத்து தரக்கூடிய உளுந்தங்களி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இந்த உளுந்தங்களி செய்ய தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள் (Ulunthankali Ingredients)
- உளுந்து (உடைத்த உளுந்து) – 1 கப்
- அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
- வெல்லம் அல்லது கருப்பட்டி (பொடியாக்கவும்) – 1 கப்
- தண்ணீர் – தேவையான அளவு
- தேங்காய் (துருவியது) – தேவையான அளவு
- ஏலக்காய் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை (Ulundhu kali Seivathu Eppadi)
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் உளுந்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- அதேபோல அரிசியையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- உளுந்து மற்றும் அரசி ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் அல்லது கருப்பட்டி மற்றும் அதில் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.
- அதில் அரைத்த உளுந்து மற்றும் அரிசி மாவை சேர்த்து கட்டி விழாமல் கரண்டி கொண்டு கிளரவேண்டும்.
- அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். அடி பிடிக்காத வகையில் கைவிடாமல் கிளறி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.
- அதன் பிறகு 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- அதன் பிறகு உளுந்து களி நன்கு வெந்த பிறகு பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் வரும். அதன் பிறகு கையில் தண்ணீர் நினைத்து உளுந்தங்களியை உருண்டையாக உருட்டி வைக்கவும். தற்போது சுவையான உளுந்தங்களி தயார்.
உளுந்தங்களி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of Ulunthankali)
- நாம் உளுந்தங்களி சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குடலில் இருக்கின்ற நச்சுக்கள் எல்லாம் வெளியேறிவிடும்.
- உளுந்தங்களி சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- உளுந்தங்களி சாப்பிடுவதால் இடுப்பு வலி சரியாகும் என கூறப்படுகிறது.
- வாரம் ஒரு முறை உளுந்தங்களியை சாப்பிட்டால் சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் என கூறப்படுகிறது.
- விளையாட்டு வீரர்கள் உளுந்து களி சாப்பிடுவதால் எளிதில் சோர்வடையாமல் அதிக நேரம் செயலாற்றும் திறனை கொண்டிருக்க முடியும்.
Ulunthankali Recipe: ஊட்டம் தரும் உளுந்தங்களி… ஈசியாக செய்வது எப்படி?
உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உளுந்தங்களியை (Ulunthankali Recipe in Tamil) செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
Type: Appetizer
Cuisine: Tamil Nadu
Keywords: Ulunthankali Recipe, How To Make Ulunthankali
Recipe Yield: 4
Preparation Time: PT10M
Cooking Time: PT30M
Total Time: PT40M
Recipe Ingredients:
- Uludu (broken Ulu) – 1 cup
- Rice – 2 Tablespoon
- Jaggery or blackcurrant (powdered) – 1 cup
- Water – required quantity
- Coconut (grated) – as required
- Cardamom – a little
- Ghee – required quantity
4.5