பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் விளையாட்டு தான் கிரிக்கெட். இந்த விளையாட்டு எவ்வளவு பிரபலமாக உள்ளதோ அதை விடவும் அதிகமா சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமாக இருக்கும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. இதுப்போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது.
தற்போது நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் தான் நேற்று இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி (AFG vs IRE Test Match) தொடங்கியுள்ளது. இந்த போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ்-ஐ வென்றது. எனவே இந்த அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 54.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆனால் இந்த போட்டியில் தான் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணியில் முதலில் பேட்டிங் செய்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகயுள்ளது. இந்த போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக விளையாடிய இருவரும் மாமா மற்றும் மருமகன் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நாம் பல போட்டிகளில் ஓரே அணியில் சகோதரர்கள், சகோதரிகள் இணைந்து விளையாடுவதை பார்த்து இருப்போம். ஆனால், இந்தப் போட்டியில் சற்று வித்தியாசமாக மாமாவும் மருமகனும் இணைந்து விளையாடியுள்ளனர். அதாவது அந்த தகவலின் படி ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக உள்ள இப்ராஹிம் சத்ரான் (Ibrahim Zadran) மற்றும் நூர் அலி சத்ரான் (Noor Ali Zadran) ஆகிய இருவரும் மாமா மற்றும் மருமகன் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்ராஹிம் சத்ரான் மாமா தான் நூர் அலி சத்ரான் ஆவார். மேலும் இவர்கள் இருவரும் தான் நேற்று ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் போட்டியில் மாமா நூர் அலி சோபிக்கத் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அவரது மருமகன் இப்ராகிம் அரைசதம் அடித்து மொத்தம் 53 ரன்கள் அடித்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்: தாய்மார்களே போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும் தேதி அறிவிப்பு..! |