உலக அளவில் ஆட்டோமொபைல் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. அதிலும் இந்திய உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தையாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் இதன் தேவையும் விற்பனையும் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இந்தியாவில் வாகனங்கள் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் மாநிலங்களின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. இப்பதிவில் நாம் இதுபற்றி பாரக்கலாம்.
உலக அளவில் ஆட்டோமொபைல் விற்பனையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்காவுக்கு முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. மேலும் பிரபலமான ஆட்டோமொபைல் சந்தையாகவும் விளங்குகிறது. மேலும் தற்போதைய சூழலில் பல பெரிய பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் வந்துவிட்டது.
இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்தில் அதிக அளவிலான ஆட்டோமொபைல் வாகனங்களை விற்பனை செய்த (Vehicle Sales) மாநிலங்களின் பட்டியலை SIAM வெளியிட்டுள்ளது. இதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது (Vehicle Sales First Place In India) என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்கப்பட்ட மாநிலமாக உத்திர பிரதேசம் முதலிடத்தை (Vehicle Sales First Place) பிடித்துள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா அதன் பிறகு மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு ஆகியவை உள்ளது. இந்த விற்பனையில் பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் உள்பட 3-சக்கர வாகனங்களும் அடங்கும்.
இந்த போட்டியில் பயணிகள் வாகனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வகையில் கார்கள் மற்றும் பயணிகளை அழைத்துச் செல்லும் சிறிய ரக வேன்கள் ஆகியவை அடங்கும். 2-வது இடத்தில் உத்திர பிரதேசமும் மற்றும் 3-வது இடத்தில் கர்நாடாகவும் உள்ளன.
இதையும் படியுங்கள்: Whatsapp New Update: இந்த அப்டேட் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..! |