இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதையை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுவதாக பாலிவுட் இயக்குனர் பால்கி சில மாதங்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்னில் கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக இளையராஜாவின் கதாபாத்திரத்திற்கு கதாபாத்திரத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான (Ilayaraja Biopic Movie Hero) தனுஷ் பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.
ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களால் இசைஞானி என அழைக்கப்படுபவர் தான் இளையராஜா. 70-வது களில் தொடங்கிய இவரது இசைப்பயணம் இப்போது வரை தொடர்கிறது. இன்று பல புதிய இசையமைப்பாளர்கள் வந்தாலும் இவருக்கு ஏன்று தனி இடம் உள்ளது. மேலும் இவர் கிட்டத்தட்ட 1000 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் மேலும் இவரின் பல திரைப்படங்களில் இவர் பாடல்களும் பாடியுள்ளார். இளையராஜா பயோபிக் திரைப்படம் (Ilayaraja Biopic Movie) பற்றிய அப்டேட்கள் வெளியாகியுள்ளன.
முதலில் இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்குவதாக தான் இருந்தது. ஆனால் சில காரணங்களால் இவர் இப்படத்தினை இயக்கவில்லை. அதன் பிறகு தமிழ் இயக்குனர்களான அருள் மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து சில தகவல்களும் வெளியானது. மேலும் இந்த படத்தினை தனுஷ் (Danush) நடித்து தயாரிப்பதாவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான் தற்போது இந்த இளையராஜா பயோபிக் படத்தை எந்த இயக்குனர் (Ilayaraja Biopic Movie Director) இயக்க வேண்டும் என்று இசைஞானி இளையராஜா தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலின் படி இப்படத்தினை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த பயோபிக் படத்தை இயக்க வேண்டும் என்றால் தன்னுடைய முழு வரலாற்றையும் இயக்குனர் தெரிந்திருக்க வேண்டும். எனவே இயக்குனரிடம் தன் வரலாற்று கதையை முழுமையாக கூற வேண்டும் என்பதற்காக இளையராஜா அருண் மாதேஸ்வரனை நேரில் அழைத்து இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களின் படி பார்த்தால் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) தான் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்று தெரிகிறது. எனினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. எனவே நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இதையும் படியுங்கள்: 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கில்லி..! தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்..! |