தங்கள் உதவிக்காக பலரும் இன்றைய காலகட்டத்தில் பணிப்பெண்களை வீட்டில் வேலைகளுக்காக வைத்துக்கொள்கின்றனர். அவர்களில் பலர் பணிப்பெண்களை தங்கள் வீட்டில் ஒருவர் போல நடத்தினாலும் சிலர் மிகவும் மோசமாக நடத்துகின்றனர். அதிலும் அதிகாரமும் பணபலமும் அதிகம் இருப்பவர்கள் சிலர் இவ்வாறு தான் உள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை மிகவும் கொடுமையான முறையில் சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் தொகுதியின் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மருமகள் மெர்லினா (Ando Mathivanan and His daughter-in-law Merlina) ஆகியோர் மீது சில நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் காரணமாக இவர்கள் இருவரையும் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
இவர்கள் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இதற்கிடையில் ஜாமீன் கோரி வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு குற்றவாளியான எம்எல்ஏ-வின் மகன் ஆண்டோ (DMK MLA son Ando Mathivanan) மற்றும் மருமகள் மெர்லினா (Merlina) ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் தற்போது இந்த வழக்கு இன்று (20.02.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலைியல் தற்போது இந்த வழக்கின் ஜாமின் மீதான தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் கூறியதாவது, இந்த வழக்கை வரும் மார்ச் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தனி மனித உரிமை சார்ந்த வழக்குகளில் ஏன் இவ்வளவு அலட்சிய போக்குடன் காவல்துறை நடந்து கொள்கிறது என நீதிபதிகள் அதிரடியாக கேள்வி உள்ளனர். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்று பலரும் எதிர்பார்ப்பு உள்ளனர்.
இதையும் படியுங்கள்: எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா ..! |