HomeசினிமாSK 22: இவங்கதா ஹீரோயினா..! இது எதிர்பார்க்காத காம்போவா இருக்கே..!

SK 22: இவங்கதா ஹீரோயினா..! இது எதிர்பார்க்காத காம்போவா இருக்கே..!

தமிழ் திரையுலகின் முக்கிய கதாநாயகனாக இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை அளித்துள்ளார். இவரது படங்களுக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். இவருடைய படங்களும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் விதத்தில் தான் இருக்கும்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயலான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகி வெற்றிப்பெற்றது. மேலும் நல்ல வசூலையும் பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் நடித்து தொடங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தன்னுடைய கடின முயற்சி மற்றும் உழைப்பால் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகராகவும் மாறியுள்ளார். மேலும் மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது 22-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் SK 22 படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் குறித்த அப்டேட் (Sivakarthikeyan Next Movie Heroin) வெளியாகியுள்ளது. இந்த நடிகை இப்படத்தில் கமிட் ஆவார் என்று யாரும் எதிர்ப்பார்த்து இருக்க மாட்டோம்.

குறுகிய காலத்தில் சில படங்களில் மட்டுமே நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருக்கும் மிருணாள் தாகூர் தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக (SK 22 Heroin) கமிட்டாகி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இது குறித்த அறிவிப்பினை பட குழு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan Next Movie Heroin
இதையும் படியுங்கள்: பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..! அடேங்கப்பா இத்தனை கோடியா..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular