இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் நவீனமயம் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் பணப் பரிவர்த்தனைகள் தான் மாறிவிட்டது. இப்போது அதிக அளவில் அனைவரும் ஆன்லைன் முறையில் தான் பணம் பரிமாற்றம் செய்கின்றனர்.
வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவது போன்ற அனைத்து விதமான செயல்களுக்கும் ஆன்லைன் மூலம் தான் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். மேலும் இப்போது அனைத்து கடைகளிலும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைகள் வந்துவிட்டது. எனவே அனைவரும் ஆன்லைன் முறையில் தான் பணம் செலுத்துகிறோம்.
ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை நம்மில் பலரும் பயன்படுத்துவது என்றால் அது யுபிஐ பணப்பரிவர்த்தனை தான். அதிக அளவிலான மக்கள் இதையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பிப்ரவரி மாதத்தில் மட்டும் எவ்வளவு பரிவர்த்தனை நடைபெற்றது என்ற தகவல் (UPI transaction in February) வெளியாகியுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகவும் உள்ளது.
இந்த 2024-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 18 லட்சத்து 28 அயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த தகவலை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் தலைமுறையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடந்து அதிகமாகி வருகிறது. மேலும் இது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.
இதையும் படியுங்கள்: குழந்தைகளை நர்சரி பள்ளியில் சேர்க்க குறைந்தபட்ச வயது அறிவிப்பு..! இதற்கு கீழ் இருக்க கூடாது..! |