Homeவேலைவாய்ப்பு செய்திகள்மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய அருமையான வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய அருமையான வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்காக தேர்வுகளுக்கு தயாராகிக்கொண்டு இருப்போம். இதுப்போல இருப்பவர்களுக்காக தான் தற்போது ஒரு சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பலரும் எதிபார்த்து காத்திருக்ககும் UPSC அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் வெளியாகியுள்ள இந்த UPSC Recruitment 2024 அறிவிப்பின் படி 48 ISS Posts-க்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் போன்ற மற்ற தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக UPSC Recruitment Official Notification 2024 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. UPSC Job Notification -ன் படி Indian Economic Service – 18 காலிப்பணியிடங்களும் மற்றும் Indian Statistical Service – 30 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. இது போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த UPSC Recruitment This Year அறிவிப்பின் படி நிரப்பப்படவுள்ள காலி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி ஒவ்வொரு துறைகளை பொறுத்து மாறுபடுகிறது. அதன் படி இந்திய பொருளாதார சேவை பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொருளாதாரம், அப்ளைடு எகனாமிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் அல்லது எகனாமெட்ரிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய புள்ளியியல் சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் புள்ளியியல், கணிதப் புள்ளியியல், பயன்பாட்டுப் புள்ளியியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். இந்த பதவிக்கான சம்பளம் பற்றிய விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

UPSC Recruitment 2024 -ன் படி காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள upsconline.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 10.04.2024 முதல் 30.04.2024 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு முதலில் எழுத்து தேர்வு நடைபெறும் அதன் பிறகு நேர்முக தேர்வு நடைபெற்று அதன் மூலம் அட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த UPSC Recruitment பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ள Official Notification -ஐ முழுமையாக பார்க்கவும்.

மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய அருமையான வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-11

Posting Expiry Date: 2024-04-30

Employment Type : FULL_TIME

Hiring Organization : Union Public Service Commission

Organization URL: www.upsc.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Dholpur House, Shahjahan Road, New Delhi, Delhi, 110069, India

Education Required:

  • Bachelor Degree
  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அருமையான வேலை..! மிஸ் பண்ணிடாதிங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular