Homeவேலைவாய்ப்பு செய்திகள்மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய உதவி கமாண்டன்ட் வேலை வாய்ப்பு..! மிஸ்...

மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய உதவி கமாண்டன்ட் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

UPSC Recruitment 2024: அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதிலும் குறிப்பாக மத்திய அரசு வேலையில் சேர அதிகம் ஆர்வம் கொண்டு, மத்திய அரசு வேலைக்கு தயாராகி காெண்டு இருப்பார்கள். இந்நிலையில் மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவு உள்ளவர்களுக்கு தற்போது அருமையான வாய்ப்பு ஒன்று UPSC வெளியிட்டுள்ளது.

UPSC Job Notification 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 506 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் உள்ள கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

Union Public Service Commission (UPSC) ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி (UPSC Recruitment in Tamil) எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) – 186 பணியிடங்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) – 120 பணியிடங்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) – 100 பணியிடங்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) – 58 பணியிடங்கள், சஷாஸ்த்ர சீமா பால் (SSB) – 42 பணியிடங்கள் என மொத்தமாக 506 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த அறிவிப்பு UPSC -ன் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது UPSC -ன் அதிகாரப்பூர்வ www.upsc.gov.in இணையதள பக்கத்தில் (UPSC Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

UPSC Velai Vaippu 2024 ன் படி இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC Jobs Notification 2024 -ன் படி காலியாக உள்ள 506 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 20. மேலும் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும்.

மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைகள்/ உடல் திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை, தகுதி பட்டியல், நேரடி நேர்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் (UPSC Job Vacancy).

UPSC அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 24 முதல் மே 14 ஆம் தேதிக்குல் (24.04.2024 – 14.05.2024) ஆன்லைம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 200 கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD/பெண்களுக்கு இந்த விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இந்த யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) -ன் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இந்த www.upsc.gov.in லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் வேலை வாய்ப்பு தொடர்பான முழு தகவல்களை தெரிந்து கொள்ள UPSC வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை (UPSC Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மத்திய அரசு அதிகாரி ஆக வேண்டுமா? UPSC வழங்கிய உதவி கமாண்டன்ட் வேலை வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

UPSC 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (UPSC Recruitment 2024) வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-25

Posting Expiry Date: 2024-05-14

Employment Type : FULL_TIME

Hiring Organization : Union Public Service Commission (UPSC)

Organization URL: www.upsc.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Dholpur House, Shahjahan Road, New Delhi, Delhi, 110069, India

Education Required:

  • Bachelor Degree

மேலும் படிக்க: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் மாதம் ரூ.50,000/- ல் அருமையான வேலை வாய்ப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular