Homeவேலைவாய்ப்பு செய்திகள்UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…மிஸ் பண்ணிடாதீங்க..

UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…மிஸ் பண்ணிடாதீங்க..

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC Recruitment 2024 அறிவிப்பின் படி 147 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் குறித்த அனைத்து தகவல்களை இப்பதிவில் பதிவிட்டுள்ளோம்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் காலியாக உள்ள 147 பணியிடங்களை நிரப்புவதற்காக UPSC Recruitment Notification 2024 -ஐ அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. UPSC Job Notification -ன் படி விஞ்ஞானி-பி – 12, மானுடவியலாளர் – 01, ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III உதவிப் பேராசிரியர் – 123, உதவி செயற்பொறியாளர் – 04 , உதவி இயக்குனர் – 07 இது போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் படி நிரப்பப்படவுள்ள காலி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி ஒவ்வொரு துறைகளை பொறுத்து மாறுபடுகிறது. குறைந்தபட்ச கல்வி தகுதியாக இளநிலை பட்டம் முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 35 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். இந்த பதவிக்கான சம்பளம் பற்றிய விவரங்களை அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

UPSC Recruitment 2024 -ன் படி காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 23.03.2024 முதல் 11.04.2024 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும். இந்த UPSC Recruitment பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ள Official Notification -ஐ முழுமையாக பார்க்கவும்.

இதையும் படியுங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு (TN TRB) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 4000 காலிப்பணியிடங்கள்…உடனே விண்ணப்பிக்கவும்…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular