உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப் படவுள்ளது. இந்நிலையலில் பலரும் தங்கள் துணையுடம் காதலர் தினத்தினை கொண்டாட பல திட்டங்களை வைத்து இருப்பர். பலர் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று பிடித்த செயல்களை செய்து மகிழ்வர் மற்றும் சிலர் வாழ்த்துக்கள் தெரிவிப்பது மற்றும் பிடித்த பரிசுகளை ஒருவருக்கொருவர் அளித்து மகிழ்வர்.
இவைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க சிலர் கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கி அன்றைய நாளை செலவிடுவர். எனவே நாம் இப்பதிவில் காதலர் தினத்தில் செல்ல வேண்டிய கோவில் பற்றிய தகவலை பார்க்கவுள்ளோம்.
தெய்வங்களில் சிறந்த ஜோடி என்றால் பலருக்கும் நினைவில் வருவது முருகன் மற்றும் வள்ளி தான். பலரின் விருப்ப கடவுளாகவும் உள்ளனர். இவர்களை பிடிக்காத மற்றும் வணங்காத ஆட்களே இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த தினத்தை கோவில்களுக்கு சென்று கொண்டாட நினைக்கும் அனைவரும் இந்த வருடம் இந்த கோவிலுக்கு சென்று கொண்டாடலாம். அதை பற்றி பார்க்கலாம்.
வானமகள் பிராட்டி வேடுவ குறமகள் வள்ளியை வேடனாக வந்த முருகன் கரம் பிடித்த திருத்தளமே வேலூரை அடுத்துள்ள வள்ளிமலை (Valli Mazhai Kovil) திருக்கோயில். மேலும் இந்த கோவிலில் தான் முருகன் வள்ளியை கண்டது, கடம்ப மரமாக நின்றது மற்றும் யானையை துரத்த செய்தது மேலும் அவரை கரம் பிடித்தது என இவர்களது தெய்வீக காதலை சொல்லும் இடமாக இந்த இடம் உள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் நிறைந்த இக்கோவிலுக்கு காதலர் தினம் அன்று சென்று அங்குள்ள கடவுளை தரிசித்தால், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே காதலர் தினத்தன்று இக்கோவிலுக்கு சென்று அனைவரும் வழிபடலாம்.

இதையும் படியுங்கள்: Valentines Day Wishes in Tamil..! |