மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தமிழகத்தில் அனைத்து கட்சிகள் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அவர் கூறியதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.
ஆனால் அந்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகுளக்கு பிறகே நடைமுறைக்கு கொண்டு வந்தது. அதுவும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து 2 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகையான ரூபாய் 1,000/- வழங்கப்பட்டு வருகிறது (Urimai Thogai Problem) மற்றவர்களுக்கு உரிமை தொகை மறுக்கப்பட்டது.
ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்க உள்ள மக்களவை தேர்தலில் திமுக அரசு வெற்றி பெற்றால் தற்போது உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் 2 கோடி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை கிடைக்காது. இந்த தேர்தலில் திமுக தோற்றால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை (Urimai Thogai Issue) கிடைக்கும். எனவே தமிழ்நாட்டு வாக்காளர்கள் அனைவரும் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து திமுக கூட்டணி கட்சிகளை படுதோல்வி அடையச் செய்யுங்கள் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மோதல்..! அதிருப்தி அடைந்த கூட்டணி கட்சிகள்..! |