Homeசினிமாபிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்..! யார் தெரியுமா அவர்?

பிரபல சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்..! யார் தெரியுமா அவர்?

இன்றைய காலகட்டத்தில் 2-வது திருமணம் என்பது மிகவும் பொதுவானதாக மாறிவிட்டது. அதிலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் இரண்டாவது திருமணம் செய்வது சாதாரணமாகிவிட்டது. திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பல நடிகர் நடிகைகள் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டு தான் வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ள சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக அவரது கணவரை விவாகரத்து செய்து வந்த நிலையில் தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

பிரபலமான தொலைகாட்சிகளில் முக்கிய இடத்தில் உள்ள தொலைகாட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட சீரியல்களில் ஒன்றுதான் வாணி ராணி. இந்த சீரியல் மூலம் பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலமாகினர். அதில் ஒருவர் தான் நடிகை நிவேதிதா (Vani Rani Actress Nivedita) ஆவார்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகராசி தொடரில் நடித்த நடிகர் ஆர்யனை இவர் (Actress Nivedita) திருமணம் செய்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் தான் தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது இவர் சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான திருமகள் சீரியல் நடிகர் சுரேந்தரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Vani Rani Actress Nivedita Second Marriage
இதையும் படியுங்கள்: Thalapathy 69: விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர் இவரா..! அப்போ சம்பவம் இருக்கு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular