இந்த பதிவில் தை அமாவாசை (Thai Amavasai 2024) அன்று படையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள் பற்றி பார்க்க உள்ளோம். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை வரும். அதிலும் சிறந்தது தை மற்றும் ஆடி அமாவாசை தான்.
சூரியனும், சந்திரனும் ஒரோ நேர்கோட்டில் வரும் அன்றைய தினம் நிலா தெரியாது அதுவே அமாவாசை எனப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் New Moon என்று அழைப்பார்கள். ஆன்மீக ரீதியில் அமாவாசை என்பது ஒரு முக்கியமான நாள் ஆகும். அமாவாசை அன்று ஆண்கள் விரதம் இருந்து அவர்களின் முன்னோர்களுக்கு திதி/ தர்ப்பணம் கொடுப்பார்கள். அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்றும், முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்றும் கூறுவார்கள்.
அதேநேரத்தில் அனைவராலும் அனைத்து அமாவாசை அன்று அவர்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாது. சிலர் மட்டுமே அனைத்து அமாவாசை அன்று அவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்க முடியாதவர்கள் தை அல்லது ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு தை மற்றும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறந்தது. இந்த தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது படையலுக்கு வைக்க வேண்டிய காய்கறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்களாம்.
Table of Contents
தை அமாவாசை (Thai Amavasai 2024)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அன்றைய தினம் ஆண்கள் விரதம் இருந்து மறைந்த அவர்களின் முன்னார்களை நினைத்து திதி கொடுப்பார்கள். அதன் பிறகு காய்கறிகள் மற்றும் கீரை வகை தானமாக வழங்குவார்கள். பசுவிற்கு அகத்திகிரை வழங்குவார்கள். இவ்வாறு வழங்குவதன் மூலம் நமது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. அதேபோன்று இவ்வாறு திதி கொடுப்பதன் மூலம் பித்ரு தோஷம் ஏற்படாமலும் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வருடம் தை அமாவாசை பிப்ரவரி 09 ம் தேதி (Thai Amavasai 2024) வெள்ளிகிழமை வருகிறது. இந்த தை அமாவாசை திதி ஆனது 2024 பிப்ரவரி 09 ஆம் தேதி காலை 08.05 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி அதிகாலை 04.28 மணிக்கு முடிகிறது. அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நேரம் காலை 09.30 மணி முதல் காலை 10.30 மணி வரை ஆகும்.
தை அமாவாசை படையலுக்கு உகந்த காய்கறிகள்
அமாவாசை அன்று வீட்டில் உள்ளவர்கள் விரதம் (Amavasai viratham) இருந்து மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பொட்டு வைத்து, பூ வைப்பார்கள். அதேபோல் முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து அவர்களின் புகைப்படங்களுக்கு முன்பு படைப்பார்கள். இந்த அம்மாவாசை நாளில் காய், கனி, கீரை, கிழங்கு போன்றவற்றை சமைக்க வேண்டும் என சாஸ்திரம் கூருகின்றன.
முன்னோர்கள் படத்திற்கு முன்பு படையல் செய்த பிறகு அதில் சிறிதளவு உணவு காக்கை மற்றும் எறும்புகளுக்கு கொடுக்க வேண்டும். இவைகளுக்கு உணவளிப்பது மூலம் நமக்கு நம் முன்னோர்களின் பூர்ண ஆசிர்வாதம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு கடவுளின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. படையல் கொடுத்து விட்டு இயலாதவர்களுக்கு தானம் கொடுக்கலாம். பிறகு நம் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம். இந்த தை அமாவாசை அன்று சமைக்கும் பயன்படுத்தும் காய்கறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்களாம்.
- புடலங்காய்
- மாங்கா இஞ்சி
- இஞ்சி
- அவரக்காய்
- வெள்ளை பூசணிக்காய்
- மஞ்சள் பணிக்காய்
- பாரிக்காய்
- பாகற்காய்
- மிளகு
- பயத்தங்காய்
- நெல்லிக்காய்
- வாழைக்காய்
- பிரண்டை
- மாங்காய்
- வாழைத்தண்டு
- வாழைப்பூ
- சக்கரவள்ளி
- சேனை
- சேப்பங்கிழங்கு
மேலும் தெரிந்துகொள்ள: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..! |
இந்த காய்கரிகளை பயன்படுத்தி தை அமாவாசை அன்று சமையல் செய்வார்கள். இந்த சமையலை முன்னோர்களின் படத்துக்கு முன் படையல் வைத்து வணங்குவார்கள். அதன் பிறகு அந்த படையலை காகத்திர்கு வைப்பார்கள். இந்த காய்கரிகளுடன் மேலும் சில பொருட்களும் Thai Amavasai அன்று படைகளுக்கு பயன்படுத்துவார்கள்.
- அகத்திகிரை
- கரிவேப்பிலை
- பாசிப்பருப்பு
- உளூந்து
- கோதுமை
- வெல்லம்
இந்த காய்கறிகள், கனிகள் மற்றும் கீரை வகைகளை பயன்படுத்தி தை அமாவாசை (Thai Amavasai) அன்று சமைக்கும் சமையலில் சேர்த்தால் வீட்டில் நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த சமையலை இறந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு படையலாக வைத்து வணங்குவதன் முலம் அவர்களின் ஆசிர்வாம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன் பிறகு காக்கைக்கு இந்த படையலில் சிறிதளவு வைக்க வேண்டும். இந்த காகங்கள் நமது முன்னோர்கள் கருதப்படுகின்றன. அவை சாப்பிட்ட பிறகு வீட்டில் உள்ளவர்கள் சாபிட வேண்டும். இவைகளே தை அம்மாவாசைக்கு படைக்க வேண்டடிய காய்கரிகள் ஆகும்.
தை அமாவாசை படையலுக்கு பயன்படுத்த கூடாத காய்கறிகள்
அமாவாசை சமையலுக்கு பயன்படுத்தும் காய்சரிகளை போலவே சில காய்கரிகளை பயன்படுத்தவும் கூறடாது. இவற்றை பயன்படுத்தி சமைத்தால் தோஷம் வந்து சேரும் என கூறுவார்கள். கீழ் உள்ள காய்கறிகள் அனைத்தும் அமாவாசை அன்று சமையலுக்கு பயன்படுத்த கூடாது.
- வெங்காயம்
- முருங்கக்காய்
- தக்காளி
- முட்டகோஸ்
- பட்டாணி
- உருளைகிழங்கு
- நூக்கல்
- பீன்ஸ்
- காரட்
- கத்தரிக்காய்
- காலிஃப்ளவர்
- கத்தரிக்காய்
- வெண்டைக்காய்
- பூண்டு
- சுரக்காய்
- கோவக்காய்
- பீட்ருட்
- பச்சைமிளகாய்
- முள்ளங்கி
- ப்ரோக்கோலி
- சொள சொள
- பெருங்காயம்
அந்த காய்கரிகளை பயன்படுத்தி தை அமாவாசை அன்று சமையல் செய்ய கூடாது. இந்த காய்கரிகள் கொண்டு அமாவாசையின் போது சமையல் சமைத்தால் அது தோஷம் என கூறப்படுகிறது. அமாவாசை அன்று வீட்டில் உள்ளவர்கள் விரதம் இருந்து குறிப்பிட்ட காய்கள், கனிகள் மற்றும் கீரை வகைகளை மட்டுமே பயன்படுத்தி சமையல் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த சமையலை முன்னோர்களுக்கு படையல் வைக்க வேண்டும். இதன் மூலம் முன்னேர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
Thai Amavasai –FAQ
1. இந்த வருடம் தை அமாவாசை எப்போது வருகிறது?
தை அமாவாசை திதி ஆனது இந்த வருடம் பிப்ரவரி 09 ம் தேதி வருகிறது.
2. அமாவாசை என்ற சொல்லுக்கு இணையான வேறு தமிழ் சொற்கள்?
புதுப்பிறை, பிறையுவா, மறைமதி, இருளுவா, இருண்மதி, காருவா ஆகியவை அமாவாசை என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் உள்ள வேறு சொற்கள் ஆகும்.