Homeசமையல் குறிப்புகள்கோடையில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கஞ்சி... கசப்பே இல்லாமல் ருசியாக செய்யலாம் வாங்க..!

கோடையில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கஞ்சி… கசப்பே இல்லாமல் ருசியாக செய்யலாம் வாங்க..!

இந்த கோடை வெயிலால் உடல் அதிக அளவில் வெப்பமடையும். இதன் காரணமாக உடல் சூடு அதிகரிக்கும். இதுப்போன்ற நேரத்தில் நாம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பல உணவுகள் உள்ளது. அதில் மிகவும் முக்கியமான ஒரு உணவு தான் வெந்தய கஞ்சி. ஆனால் இதனை பலர் சாப்பிடுவதே இல்லை. ஏனென்றால் இதில் உள்ள கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். எனவே நாம் இப்பதிவில் கசப்பு இல்லாமல் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்.

இந்த வெந்தயக் கஞ்சி உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. அதிலும் முக்கியமாக இது உடல் சூட்டை குறைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி ,முடி கொட்டுதல் போன்றவற்றையும் இது தடுக்கும் என கூறப்படுகிறது. இந்த கஞ்சியை கோடை கோடை காலங்களிலும், பெண்கள் மாதவிடாய் நேரங்களிலும் செய்து குடித்து வரலாம். இந்த கஞ்சியை நாம் காலை நேரத்தில் குடிப்பது மிகவும் சிறந்தாக இருக்கும்.

வெந்தய கஞ்சி செய்வது எப்படி (How To Make Vendhaya Kanji in Tamil)

தேவையான பொருட்கள் (Vendhaya Kanji Ingredients)

  • வெந்தயம் – 6 ஸ்பூன்
  • அரிசி – 3 ஸ்பூன்
  • வெல்லம் – சுவைக்கேற்ப
  • பால் – 400 ML

வெந்தய கஞ்சி செய்முறை (Vendhaya Kanji Recipe in Tamil)

  • வெந்தய கஞ்சி செய்வதற்கு முதலில் வெந்தயம் மற்றும் அரிசி இரண்டையும் கழுவி தனித்தனியே முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீங்கிவிடும்.
  • மறுநாள் காலையில் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை சிறிது நிறுத்து விட்டு அதை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். இந்த தண்ணீர் நன்கு சூடான பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்.
  • இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை பத்து நிமிடம் வரை நன்கு கிளறி வேக வைக்கவும்.
  • இவை நன்றாக வெந்த பிறகு அதில் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • இப்போது அடுப்பை அணைத்துவிட்டு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் வெந்தயக் கஞ்சி ரெடி.
Vendhaya Kanji Seivathu Eppadi

நாம் இப்பதிவில் இந்த கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கஞ்சி சுவையாக செய்வது எப்படி (Vendhaya Kanji Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

கோடையில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய கஞ்சி... கசப்பே இல்லாமல் ருசியாக செய்யலாம் வாங்க..!

நாம் இப்பதிவில் உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம்.

Type: Appetizer

Cuisine: Tamil Nadu

Keywords: Vendhaya Kanji Recipe, Vendhaya Kanji

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT20M

Total Time: PT30M

Recipe Ingredients:

  • Fenugreek – 6 spoons
  • Rice – 3 spoons
  • Jaggery – as per taste
  • Milk – 400 ml

Recipe Instructions: வெந்தய கஞ்சி செய்வதற்கு முதலில் வெந்தயம் மற்றும் அரிசி இரண்டையும் கழுவி தனித்தனியே முதல் நாள் இரவே ஊறவைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வெந்தயத்தில் உள்ள கசப்பு தன்மை நீங்கிவிடும். மறுநாள் காலையில் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை சிறிது நிறுத்து விட்டு அதை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். இந்த தண்ணீர் நன்கு சூடான பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும். இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை பத்து நிமிடம் வரை நன்கு கிளறி வேக வைக்கவும். இவை நன்றாக வெந்த பிறகு அதில் சுவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு அதில் காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் வெந்தயக் கஞ்சி ரெடி.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: வெயிலுக்கு ஏற்ற குளு குளு கம்பங்கூழ்..! ஈஸியா செய்வது எப்படி?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular